📅 Saturday, 15 August 2026 IST | ஆடி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports May 23, 2026 08:51 AM

ஐபிஎல் ஸ்ட்ராடஜிக் டைம் அவுட்: கோடிகளை குவிக்கும் 10 நிமிட வணிகத்தின் பின்னணி

ஐபிஎல் ஸ்ட்ராடஜிக் டைம் அவுட்: கோடிகளை குவிக்கும் 10 நிமிட வணிகத்தின் பின்னணி

ஐபிஎல் ஸ்ட்ராடஜிக் டைம் அவுட்: கோடிகளை குவிக்கும் 10 நிமிட வணிகத்தின் பின்னணி

ஐபிஎல் ஸ்ட்ராடஜிக் டைம்அவுட் (Strategic Timeout) என்பது வெறும் 2.30 நிமிட இடைவேளை மட்டுமல்ல, அது துல்லியமாகத் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படும் ஒரு பில்லியன் டாலர் வியாபாரமாகும்

ஹைதராபாத்: இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் என்று அழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் 18 சீசன்களை கடந்து, தற்சமயம் 19ஆவது சீசனில் வெற்றி நடைபோட்டு வருகிறது. அதிலும் உலக விளையாட்டு அரங்கில் ஒட்டுமொத்தக் கவனத்தையும் தன் வசம் ஈர்க்கும் ஒரு பிரம்மாண்ட தொடராக ஐபிஎல் உருவெடுத்துள்ளது என்றால் அதற்கு மாற்றுக்கருத்து இல்லை.

ஏனெனில் இது வெறும் ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மட்டும் கிடையாது. இந்த தொடரில் உலகத்தரம் வாய்ந்த வீரர்களின் திறமை, ரசிகர்களுக்கான பொழுதுபோக்கு, பல மில்லியன் டாலர்கள் பணம் கொழிக்கும் ஒரு திருவிழாவாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடருக்கான விளம்பர வருவாயை காணும் போது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வண்ணமே இருந்துள்ளது.

ஏனெனில் ஐபிஎல் தொடங்கப்பட்ட காலத்தில் பிசிசிஐயின் நிகரமதிப்பு தோராயமாக ஆயிரம் கோடியாக மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது பிசிசிஐ மதிப்பு சுமார் 18 முதல் 20ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. இவை அனைத்திற்கு ஒரே மூலக்காரணம் ஐபிஎல் தொடர் மட்டுமே. ஏனெனில் ஐபிஎல் தொடரில் அணிகள், அவர்கள் அணியும் ஜெர்சிகள், விளையாடும் மைதானங்கள் என ஒவ்வொன்றிலும் வணிகம் உள்ளது.

அவை அனைத்தையும் விவரிப்பதற்கு இந்த பதிவு பத்தாது. ஒரு புத்தகம் தான் எழுத வேண்டும். ஆனால், ஐபிஎல் தொடரில் வீரர்களுக்காக கொண்டுவரப்பட்ட இடைவேளை நேரத்திலும் பல கோடிகள் வருவாய் ஈட்டப்படுகிறது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா. ஆம்.., இந்த தொடரில் ஆட்டத்தின் போக்கை மாற்றவும், வீரர்களுக்கான ஓய்வு நேரமாகவும் கருதப்படுவது 'ஸ்ட்ராடஜிக் டைம்அவுட்' (Strategic Timeout).

நாம் இதனை வீரர்களின் ஓய்வு நேரம் என்று நினைக்கும் வேளையில், ஐபிஎல் நிர்வாகம் இந்த இடைவேளையை பயன்படுத்தி பல கோடிகளை அள்ளி வருகிறது என்பதே நிதர்சனம். ஏனெனில் இந்த இடைவேளையின் போது காட்டப்படும் விளம்பரங்கள் தொடங்கி, இடைவேளைக்கான பெயர் உரிமம் வரை அனைத்திலும் ஐபிஎல் மற்றும் பிசிசிஐ கல்லா கட்டி வருகிறது. இந்த ஸ்ட்ராடஜிக் டைம்அவுட்-ன் தொடக்கம் மற்றும் அது ஏற்படுத்திய இதனால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து பார்ப்போம்.

தொடக்கமும் விதிமுறைகளும்

ஐபிஎல் தொடரின் முதல் சீசனான 2008-ஆம் ஆண்டில் இதுபோன்ற எந்தவொரு இடைவேளையும் இல்லாமல் தான் அனைத்து போட்டிகளும் நடைபெற்றன. அப்போது ஒரு இன்னிங்ஸிற்கு பிறகே வீரர்களுக்கான ஓய்வு என்பது இருந்தது. ஆனால் அந்த நடைமுறையானது, ஐபிஎல் தொடரின் இரண்டாவது சீசனில் (2009) அப்போதைய ஐபிஎல் தலைவராக இருந்த லலித் மோடியால் மாற்றியமைக்கப்பட்டது.

அந்த சீசனில் முதல் முறையாக ஸ்ட்ராடஜிக் டைம்அவுட் என்ற விதிமுறை ஐபிஎல் தொடரில் அறிமுகமானது. இது, டி20 கிரிக்கெட்டில் அணிகள் தங்கள் உத்திகளை மாற்றி அமைக்க இந்த இடைவேளை உதவும் எனக் கூறப்பட்டது. அதுவும் குறிப்பாக அந்த சீசனில் இந்த இடைவேளைக்கான காள அளவானது 7.30 நிமிடங்களாக இருந்தது. ஆனால் டி20 கிரிக்கெட்டில் 7.30 நிமிட இடைவேளை மிக நீண்ட இடைவேளையாக இருந்ததன் காரணமாக சர்ச்சைகள் வெடித்தன.

குறிப்பாக சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பல சர்வதேச ஜாம்பவான்கள் இந்த இடைவேளையை கடுமையாக விமர்சித்திருந்தார். ஏனெனில் ஒரு பேட்ஸ்மேன் அதிரடியாக விளையாடி நல்ல ஃபார்மில் இருக்கும்போது, இந்த இடைவேளை அவரது கவனத்தை கலைத்து, ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடும் என்று குற்றாச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. மேலும் இந்த விதிமுறையை பயன்படுத்தி வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட அதிக வாய்ப்புகளை வழங்குகிறது என்ற விமர்சனங்களும் எழுந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

கடுமையான விமர்சனங்களுக்கு பிறகு இந்த டைம்அவுட்டின் கால அளவானது 7.30-ல் இருந்து 2.30ஆக குறைக்கப்பட்டது. அதன்பின் காலப்போக்கில் ஒரு இன்னிங்ஸிற்கு இரண்டு முறை என ஒரு போட்டிக்கு மொத்தம் 4 டைம்அவுட்கள் (மொத்தம் 10 நிமிடங்கள்) வழங்கப்படுகின்றன. இதில் ஒரு ஒன்னிங்ஸின் 6 முதல் 9 ஓவர்களுக்கு இடையில் பந்துவீசும் அணியும், 11 முதல் 16 ஓவர்களுக்கு இடையில் பேட்டிங் செய்யும் அணிகளும் டைம்அவுட் விதியை பயன்படுத்தலாம். ஒருவேளை அணிகள் இந்த இடைவேளையைக் கோராவிட்டால், நடுவர்களே குறிப்பிட்ட ஓவர்களின் முடிவில் இந்த இடைவேளையை அறிவிப்பார்கள்.

கோடிகளில் கொட்டும் வருமானம்

இந்த ஸ்ட்ராடஜிக் டைம்அவுட் மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், ஐபிஎல் தொடரில் இந்த விதிமுறை தொடர்ந்து நீடிப்பதற்குக் காரணம், அது ஈட்டித் தரும் அசுரத்தனமான வருவாய் ஆகும். குறிப்பாக 2014ஆம் ஆண்டிற்கு பிறகு இந்த டைம்அவுட் நேரத்திற்கு என்றே தனியாக ஸ்பான்சர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். அப்படி வந்தது தான் இந்த சியட் ஸ்ட்ராடஜிக் டைம் அவுட் என்ற பெயரும்.

அவ்வரும் தொடக்க காலங்களில் சியட் நிறுவனம் இந்த ஸ்பான்சர்ஷிப்பை ரூ.12 முதல் 15 கோடி என்ற தொகைக்கு தான் ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் அடுத்தடுத்த சீசன்களில் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பாலும், தொலைக்காட்சி விளம்பரங்களின் எண்ணிக்கை உயர்வு காரணமாகவும் ஸ்பான்சர்ஷிப் தொகையும் அதிகரித்தது. அந்தவகையில் தற்போது சியட் நிறுவனம் 4 ஆண்டுக்கு மொத்தமாக ரூ.240 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

அதன் படி பார்த்தால் ஆண்டிற்கு தோராயமாக ரூ.40 கோடிக்கு மேல் ஸ்ட்ராடஜிக் டைம்அவுட் ஸ்பான்சர்ஷிப் மூலம் மட்டுமே வருவாய் கிடைக்கிறது. இதனால் சியட் நிறுவனத்திற்கு என்ன பயன் என்ற கேள்வி எழலாம். இந்த 2.30 நிமிட இடைவேளையின் போது மைதானத்தில் உள்ள பிரம்மாண்ட திரைகள், எல்இடி ஸ்டம்புகள் மற்றும் டிவி/டிஜிட்டல் திரைகளில் சியட் நிறுவனத்தின் விளம்பரங்களே பிரதானமாக இருக்கும். அதன் மூலம் அவர்களின் பிராண்ட் மக்களை சென்றைடையும்.

ஒரு போட்டியில் இவ்வளவா?

இதுதவிர, ஐபிஎல் போட்டிகளின் போது ஒளிபரப்பப்படும் 10 வினாடி டிஜிட்டல்/டிவி விளம்பரங்களுக்காக பல லட்சங்கள் வரை வசூலிக்கப்படும் நிலையில், ஒரு போட்டியில் மொத்தமாக 10 நிமிடங்கள் விளம்பரத்திற்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதால், அதன் வருமானம் மலைக்க வைக்கிறது. அந்தவகையில், ஒரு போட்டியில் கிடைக்கும் 10 நிமிட விளம்பர இடைவெளியைப் பயன்படுத்தி, ஒளிபரப்பு நிறுவனங்களான போட்டி ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.5 கோடிக்கும் அதிகமான வருவாயை ஈட்டுகின்றன.

இதன் காரணமாகவே ஒவ்வொரு நிறுவனமும் ஸ்ட்ராடஜிக் டைம்அவுட் ஸ்பான்சர்ஷிப்பை வாங்க மல்லுக்கட்டி வருகின்றன. குறிப்பாக, உலகளாவிய பல முன்னணி நிறுவனங்கள் இந்த டைம்அவுட் விளம்பரப் பகுதிகளை ஆக்கிரமித்துத் தங்களின் பிராண்ட் மதிப்பை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதன் மூலம் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் தொடரின் வருமானமும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இதையும் படிக்கவும்

அதனால் தான், ஐபிஎல் ஸ்ட்ராடஜிக் டைம்அவுட் என்பது வெறும் 2.30 நிமிட இடைவேளை மட்டுமல்ல. அது துல்லியமாகத் திட்டமிடப்பட்டுச் செயல்படுத்தப்படும் ஒரு பில்லியன் டாலர் வியாபாரமாகும். இது ஒருபக்கம் விளையாட்டின் விறுவிறுப்பைக் கெடுக்கிறது என்ற விமர்சனங்கள் இருந்தாலும், வணிக ரீதியாக ஐபிஎல் தொடரை உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவாக நிலைநிறுத்துவதில் இந்த 10 நிமிட இடைவேளை மிக முக்கிய காரணியாக இருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை.