ஆஸ்திரேலிய நியூ சவுத் வேல்ஸ் பாராளுமன்றத்தில் 10வது பொங்கல் விழா
ஆஸ்திரேலிய நியூ சவுத் வேல்ஸ் பாராளுமன்றத்தில் 10வது பொங்கல் விழாதமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் (TACA சிட்னி) சார்பில், நியூ சவுத் வேல்ஸ் பாராளுமன்ற மாளிகையில் 10வது ஆண்டு பொங்கல் விழா வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இது, தமிழர் பண்பாடு, பாரம்பரியம் மற்றும் சமூக பங்களிப்புகளை நியூ சவுத் வேல்ஸில் கொண்டாடும் ஒரு முக்கியமான தசாப்த சாதனையாகும். பிப்ரவரி3, 2026 அன்று, NSW பாராளுமன்றத்தின் தியேற்றெட் அரங்கில் நடைபெற்ற இவ்விழாவில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தூதரக பிரதிநிதிகள், உள்ளாட்சி நிர்வாக உறுப்பினர்கள், சமூகத் தலைவர்கள், கலாச்சார அமைப்புகள் மற்றும் ஊடக பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பொங்கல் என்பது இயற்கைக்கும், விவசாயிகளுக்கும், சமூக ஒற்றுமைக்கும் நன்றி செலுத்தும் பாரம்பரிய தமிழர் அறுவடைத் திருநாளாகும். கடந்த பத்து ஆண்டுகளாக NSW பாராளுமன்றத்தில் தொடர்ந்து கொண்டாடப்படும் இந்த விழா, ஆஸ்திரேலியாவின் பன்முகப் பண்பாட்டு மதிப்புகளையும் சமூக நல்லிணக்கத்தையும் வெளிப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாக வளர்ந்துள்ளது. விழா, பாரம்பரிய வரவேற்பு, குத்துவிளக்கு ஏற்றுதல் மற்றும் பரதநாட்டியம், நாட்டுப்புற மற்றும் நவீன நடனங்கள், இசை நிகழ்ச்சிகள் ஆகிய கலாச்சார நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. சிட்னி முழுவதிலும் உள்ள தமிழ்ப் பள்ளிகள் மற்றும் கலை நிறுவனங்களின் மாணவர்கள் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். மேலும், HSC தமிழ் தொடர்ச்சி பாடத்தில் மாநில அளவிலான சாதனையாளர்கள், பொங்கல் மற்றும் கோலம் போட்டி வெற்றியாளர்களுக்கும் பாராட்டுகள் வழங்கப்பட்டன. விழாவில் கீழ்கண்ட முக்கிய விருந்தினர்கள் உரையாற்றினர்: ஸ்டீவ் காம்பர் எம்.பி., பன்முக கலாச்சார அமைச்சர் மார்க் கூர் எம்.பி., பன்முக கலாச்சாரத்திற்கான நிழல் அமைச்சர் டோனா டேவிஸ் எம்.பி., பரமட்டா தொகுதி உறுப்பினர் மற்றும் விழா நடுவர் வாரன் கெர்பி எம்.பி., ரிவர்ஸ்டோன் தொகுதி உறுப்பினர் டாக்டர் எஸ். ஜனகிராமன், சிட்னியில் உள்ள இந்திய துணைத் தூதர் மேலும், கீழ்கண்ட சிறப்பு விருந்தினர்கள் விழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்: சரிஷ்மா கலியாண்டா எம்.பி., லிவர்பூல் தொகுதி உறுப்பினர் ஜேசன் லி எம்.பி., ஸ்ட்ராத்ஃபீல்ட் தொகுதி உறுப்பினர் டாக்டர் டேவிட் சலீபா எம்.பி., ஃபேர்ஃபீல்ட் தொகுதி உறுப்பினர் ஸ்டீபன் பாலி எம்.பி., பிளாக்டவுன் தொகுதி உறுப்பினர் ஜூலியா பின் எம்.பி., முதல்வரின் பாராளுமன்ற செயலாளர் மற்றும் கலைத்துறைக்கான பாராளுமன்ற செயலாளர் மோனிகா டுட்ஹோப் எம்.பி., எப்பிங் தொகுதி உறுப்பினர் கிம் கிராகந்தார்ப் எம்.பி., நியூகாஸில் தொகுதி உறுப்பினர் டாக்டர் ஹ்யூ மெக்டெர்மட் எம்.பி., சட்டத்துறை அமைச்சருக்கான பாராளுமன்ற செயலாளர் மற்றும் ப்ராஸ்பெக்ட் தொகுதி உறுப்பினர் பார்பரா வார்டு, கவுன்சிலர் - கார்டன் வார்டு, குரிங்-கை கவுன்சில்.விழாவின் ஒரு சிறப்பு அம்சமாக, டாக்டர் இளமுருகனார் பாரதி, வாழ்த்துப்பா பாடி, தமிழ்க் கலை மற்றும் கலாச்சார சங்கத்தின் பத்து ஆண்டு பொங்கல் விழா மைல்கல்லை பெருமையுடன் பாராட்டினார். TACA சிட்னி தலைவர் அனகன் பாபு வரவேற்புரை வழங்கி, கடந்த பத்து ஆண்டுகளாக பொங்கல் விழாவை NSW பாராளுமன்றத்தில் நடத்துவதற்கு துணை நின்ற அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், கலை ஆசிரியர்கள், ஆதரவாளர்கள் மற்றும் தமிழ் சமூகத்தினருக்கு நன்றிகளை தெரிவித்தார். “இந்த 10வது பொங்கல் விழா, TACA சிட்னிக்கே அல்லாமல், ஆஸ்திரேலியத் தமிழ் சமூகத்தின் பெருமைக்குரிய தருணமாகும். எங்கள் பண்பாடு மற்றும் சமூக பங்களிப்புகள் அங்கீகரிக்கப்படுவதன் வெளிப்பாடாக இது விளங்குகிறது,” என அவர் குறிப்பிட்டார். விழா, கலாச்சார நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்து, TACA சிட்னி துணைத் தலைவர் சுமதி ரவி நன்றி கூறினார். பத்து ஆண்டுகளாக, NSW பாராளுமன்றத்தில் நடைபெறும் பொங்கல் விழா, தமிழர் அடையாளம், பண்பாட்டு பெருமை மற்றும் சமூக ஒற்றுமையின் அடையாளமாகத் திகழ்ந்து வருகிறது.- ஆஸ்திரேலியாவில் இருந்து கோவிந்த்ராஜ்