📅 Saturday, 05 September 2026 IST | ஆவணி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 05, 2026 11:03 AM

100 மேட்ச் ஆடிய முகமது ஷமி.. கவுரவம் அளிக்கும் கங்குலி.. துலீப் டிராபி பைனலுக்கு முன் பாராட்டு விழா

100 மேட்ச் ஆடிய முகமது ஷமி.. கவுரவம் அளிக்கும் கங்குலி.. துலீப் டிராபி பைனலுக்கு முன் பாராட்டு விழா

100 மேட்ச் ஆடிய முகமது ஷமி.. கவுரவம் அளிக்கும் கங்குலி.. துலீப் டிராபி பைனலுக்கு முன் பாராட்டு விழா

சென்னை: இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தனது 100வது முதல்தர கிரிக்கெட் போட்டியில் களமிறங்குவதை முன்னிட்டு அவருக்கு மேற்கு வங்காள கிரிக்கெட் சங்கம் சார்பில் இன்று (செப்டம்பர் 5) சிறப்பு பாராட்டு விழா நடக்கிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை 2026 துலீப் டிராபி இறுதிப்போட்டி தொடங்குகிறது. இதில் கிழக்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டல அணிகள் மோதுகின்றன. கிழக்கு மண்டல அணிக்காக களமிறங்கும் முகமது ஷமிக்கு இது முதல்தர கிரிக்கெட்டில் 100வது மைல்கல் போட்டியாகும். மத்திய மண்டல அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஷமி 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் நடப்பு சாம்பியனான மத்திய மண்டலத்தை வெளியேற்றி, கிழக்கு மண்டல அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற ஷமி உறுதுணையாக இருந்தார்.

இதுவரை 99 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள ஷமி 382 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதில் ஒரு இன்னிங்ஸில் 90 ரன்கள் மட்டுமே கொடுத்து 8 விக்கெட்டுகளை சாய்த்ததே அவரது சிறந்த பந்துவீச்சாகும்.

இந்த மைல்கல் சாதனையை பாராட்டும் வகையில், வங்காள கிரிக்கெட் சங்க தலைவர் சவுரவ் கங்குலி கையெழுத்திட்ட கிரிக்கெட் பந்து, முதுகில் 100 என பொறிக்கப்பட்ட சிறப்பு ஜெர்சி மற்றும் வெள்ளித் தட்டு ஆகியவை ஷமிக்கு பரிசாக வழங்கப்படுகின்றன. இந்த கவுரவத்தை வங்காள கிரிக்கெட் சங்கத்தின் பொருளாளர் சஞ்சய் தாஸ் வழங்க உள்ளார். ஷமி வங்காள கிரிக்கெட்டின் பெருமைமிக்க அடையாளம் என சஞ்சய் தாஸ் பாராட்டியுள்ளார்.

கடந்த 2025 மார்ச் மாதம் நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிக்கு பிறகு ஷமி சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. அடுத்து வரவுள்ள நியூசிலாந்து டெஸ்ட் தொடரிலும் அவர் சேர்க்கப்பட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. எனினும் முதல்தர போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசி வரும் ஷமி, தனது முழு உடற்தகுதியை நிரூபித்து மீண்டும் இந்திய அணிக்குள் நுழைய தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.