📅 Saturday, 10 October 2026 IST | புரட்டாசி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports October 10, 2026 07:03 PM

12 ஆண்டுகளாக தென்னாப்பிரிக்க மண்ணில் ஒரு ஆஸ்திரேலியர் கூட சதம் அடிக்கவில்லை.. அதை உடைத்த மேட் ரென்ஷா

12 ஆண்டுகளாக தென்னாப்பிரிக்க மண்ணில் ஒரு ஆஸ்திரேலியர் கூட சதம் அடிக்கவில்லை.. அதை உடைத்த மேட் ரென்ஷா

12 ஆண்டுகளாக தென்னாப்பிரிக்க மண்ணில் ஒரு ஆஸ்திரேலியர் கூட சதம் அடிக்கவில்லை.. அதை உடைத்த மேட் ரென்ஷா

டர்பன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மேட் ரென்ஷா அபார சதம் விளாசி, கடந்த 12 ஆண்டுகளில் தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் சதம் அடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.

டர்பனில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் மிடில் ஆர்டர் வீரராகக் களமிறங்கிய மேட் ரென்ஷா பொறுப்புடன் விளையாடினார். நிதானமாக ஆடிய அவர் 218 பந்துகளில் தனது சதத்தைப் பூர்த்தி செய்தார். தொடர்ந்து மிரட்டிய அவர் 190 ரன்களை தாண்டி இரட்டை சதத்தை நெருங்கி களத்தில் உள்ளார்.

இதற்கு முன்பு கடந்த 2014 மார்ச் மாதம் கேப்டவுனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் டேவிட் வார்னர் 145 ரன்கள் அடித்ததே, தென்னாப்பிரிக்க மண்ணில் ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் அடித்த கடைசி சதமாக இருந்தது. அதன்பின் சுமார் 12 ஆண்டுகளாக எந்தவொரு ஆஸ்திரேலிய வீரராலும் அங்கு சதம் அடிக்க முடியாத நிலையில், அந்த நீண்ட கால ஏக்கத்தை மேட் ரென்ஷா தற்போது தீர்த்து வைத்துள்ளார்.

மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் தென்னாப்பிரிக்க மண்ணில் அந்த அணிக்கு எதிராக ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ரன் என்ற சாதனையை இவர் படைத்தார். இதன் மூலம் பாகிஸ்தான் வீரர் ஷான் மசூத் அடித்த 145 ரன்கள் சாதனையை ரென்ஷா முறியடித்துள்ளார்.

முன்னதாக ஆஸ்திரேலிய அணி 124 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அப்போது நங்கூரம் போல் நின்ற ரென்ஷா, நாதன் லியோனுடன் இணைந்து 9-வது விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்து அணியைச் சரிவிலிருந்து மீட்டெடுத்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 345 ரன்கள் குவித்து வலுவான நிலையை எட்டியுள்ளது. டர்பன் மைதானத்தில் சதம் அடித்த 10-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையையும் ரென்ஷா பெற்றுள்ளார்.