12 வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம்
12 வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம் - நட்சத்திர பலன்கள்: அசுவினி முதல் புனர்பூசம் வரை!
12 வருடங்களுக்குப் பிறகு உச்ச குருவுடன் சூரியன்-புதன்! உங்கள் நட்சத்திரத்துக்கான பலன்கள்...
கடகத்தில் உச்சம்பெற்று சஞ்சரிக்கிறார் குரு. 12 வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் சஞ்சார அமைப்பு இது. அவருடனான சூரியன் மற்றும் புதன் சேர்க்கை விசேஷமாகக் கவனிக்கப்படுகிறது. இதனால் உங்கள் நட்சத்திரப்படி நிகழும் பலன்கள் என்ன? விவரிக்கிறார் ஜோதிடமாமணி திண்டுக்கல் முருகேசன்.
இந்த நட்சத்திர அன்பர்கள் செயற்கரிய செயல்களைச் செய்வதில் வலலவர்கள். ஆளுமை மிகுந்தவர்கள்; எளிதில் இலக்கை எட்டிப்பிடிப்பதில் இவர்களுக்கு நிகர் எவரும் இல்லை எனலாம்.
வீரதீர கிரகமான செவ்வாயின் ராசியான மேஷத்தில் இந்த நட்சத்திரம் வருவதால், இதில் பிறந்த நீங்கள் தன்மானம் அதிகம் உள்ளவர்களாகவே இருப்பீர்கள். முதல் நட்சத்திரமாகத் திகழ்வ தால், எங்கும் எதிலும் முதலிடத்தைப் பிடிக்கவேண்டும் என்ற சிந்தனை உங்களிடம் காணப்படும். உங்களில் பெரும்பாலானோர் கம்பீரமான தோற்றத்துடன் அழகாகக் காணப்படுவீர்கள்.
தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்–வாங்கலில் சாதகமான சூழ்நிலைகள் காணப்படும். இருப்பினும், விரயச் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும் வாய்ப்பு உள்ளது. முன்கோபம் அதிகரிக்கலாம். எனவே பேசும் வார்த்தைகளில் நிதானம் அவசியம். இல்லையெனில் தேவையற்ற வம்புகள், அபராதம் செலுத்தும் நிலை போன்ற சிக்கல்கள் ஏற்படக்கூடும்.
கணவன்–மனைவி உறவு சிறப்பாக இருக்கும். இருப்பினும், மனைவியின் உடல்நலத்தில் கவனம் தேவை. தாயார் உடல்நலம் மேம்படும். அதேபோல் தந்தையின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
உங்களுடைய உடல்நலத்திலும் கவனம் தேவை. குறிப்பாக கால் வலி, நரம்பு தொடர்பான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கக்கூடும்.
தந்தை வழி முன்னோர்களின் சொத்திலிருந்து சிலருக்கு நன்மைகள் கிடைக்கலாம். சுபச் செலவுகள் ஏற்படவும், குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடைபெறவும் வாய்ப்புள்ளது. எனினும், உறவினர் களுடன் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும். இல்லை யெனில் பகைமையும் பிரச்சனைகளும் உருவாகலாம்.
பூமி காரகனான செவ்வாயின் ராசியில் நீங்கள் பிறந்திருப்பதால், எலி வளையானாலும் தனி வளையே வேண்டும் என்று நினைப்ப வர்கள். `தனக்கென எதையும் வைத்துக்கொள்ளாமல், துன்பப்பட்டு வருவோ ருக்கு ஆறுதல் சொல்வதுடன், தன் கையில் இருப்பதையும் கொடுத்து உதவும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்’ என்று பரணி அன்பர்களைப் பற்றிச் சொல்கிறது நட்சத்திர மாலை எனும் நூல். பொதுவாக இசை, நடனம், வாசனைத் திரவியங்கள் முதலான வற்றில் நாட்டம் இருக்கும். ஆடம்பர உடைகளை அதிகம் விரும்புவீர்கள்.
உங்களூக்கு இந்தக் காலகட்டத்தில் எதிர்பாராத லாபங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. சிலருக்கு பெண் களால் நன்மைகள் உண்டாகும். சிலருக்கு பூர்வீகச் சொத்துகளில் செலவுகள் ஏற்படலாம்.
வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை. அதேபோல், தாயாரின் உடல்நலத்திலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மன உறுதி அதிகரிக்கும். புதிய முறையில் சிந்தித்து செயல்படுவதன் மூலம் வெற்றிகளைப் பெறலாம். தாய் மாமனால் உதவிகள் கிடைக்கும். இளைய சகோதரர் அல்லது சகோதரிகளின் முன்னேற்றம் மகிழ்ச்சியைத் தரும். அவர்களாலும் உதவிகள் கிடைக்கக்கூடும்.
ஸ்பெகுலேஷன் துறையில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் கைகூடலாம். அலைச்சல் அதிகரிப்பதால் சரியாக உணவு, உறக்கம் இல்லாத நிலை ஏற்படலாம். பயணங்களின்போது கவனமாக இருக்க வேண்டும். சிலருக்கு கண் தொடர்பான பாதிப்புகள் ஏற்படலாம்.
குடும்பத்தினருடன் பேசும்போது நிதானம் அவசியம். இல்லை யெனில் சண்டை, சச்சரவு ஏற்பட்டு மன அமைதி பாதிக்கப்படலாம்.
அதிர்ஷ்ட நாள்: ஆகஸ்ட் 11, 14
பரிகாரம்: குலதெய்வக் கோயிலுக்குக் குடும்பத்துடன் சென்று பொங்கலிட்டு வழிபடுங்கள்; முன்னேற்றம் உண்டாகும்.
கிருத்திகை:
அரசாங்கப் பதவிகளுக்கும் அதிகாரத்துக்கும் உரிய கிரகமான சூரியனின் அம்சத்தில் பிறந்தவர் நீங்கள். இந்த நட்சத்திரத் தின் 2, 3, 4 ஆகிய பாதங்களைக் கட்டடக் கலைக்கும் வாகனங்களுக்கும் அதிபதியான சுக்கிரன் ஆதிக்கம் செலுத்துகிறார். `கிருத்திகை நட்சத்திர அன்பர்கள் நல்லது - கெட்டது அறிந்து நியாயத்தை நிலை நாட்டும் நீதிமான்களாகவும், குணவான்களாகவும், கல்வி மீது விருப்பம் உள்ளவர்களாகவும் விளங்குவார்கள்’ என்கிறது நட்சத்திர மாலை. உங்களை `மிகவும் பிரசித்திபெற்றவர்கள்’ என்கிறது பிருகத் ஜாதகம். எங்கிருந்தாலும் சூழலை வசமாக்கிக்கொள்ளும் வல்லமை பெற்றவர் நீங்கள்.
குடும்பத்தின் தேவைகளைச் சரியான நேரத்தில் நிறைவேற்றுவதால் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். சிலருக்குக் குலதெய்வ வழிபாட்டைத் தொடரும் வாய்ப்பு கிடைக்கும். குலதெய்வம் தெரியாதவர்களுக்கு அதை அறியும் வாய்ப்பும் அமையும்.
பெரியோர்கள், ஞானிகள் ஆகியோரின் ஆசீர்வாதம் கிடைக்கும். ஆன்மிகப் பயணங்களிலும், ஆன்மிகச் செயல்களிலும் ஈடுபட வாய்ப்புள்ளது.
புத்திர, புத்திரிகள் மேன்மை அடைவார்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்பு, திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெற வாய்ப்புகள் அதிகரிக்கும். மன உறுதியும் தைரியமும் அதிகரிக்கும். இருப்பினும் மருத்துவச்செலவுகள் கூடும் வாய்ப்பு உள்ளது.
அரசு தொடர்பான நன்மைகள் கிடைக்கலாம். சிலருக்கு அரசு வேலை அமையக்கூடும். வங்கியில் தொழில் கடன் எதிர்பார்த்திருப்ப வர்களுக்கு அது கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தந்தையால் தக்க நேரத்தில் நல்ல உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை- 26; ஆகஸ்ட்-5
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் அபிராமி அந்தாதி படித்து, அம்பாளை வழிபடுங்கள். ஏழைப் பிள்ளைகளின் கல்விக்கு உதவுங்கள்; நல்லது நடக்கும்.
சந்திரனின் நட்சத்திரமான ரோகிணி, சுக்கிரனின் ராசியான ரிஷப ராசியின் ஆளுகையின் கீழ் வருகிறது. இந்த நட்சத்திரம், பால் வெளியில் அதிகம் ஒளிரும் தன்மையுடையது. இதில் பிறந்த நீங்கள் எந்த வித்தையையும் விரிவாகக் கற்றுக்கொள்வதில் வல்லவர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களுக்கு உங்களை மிகவும் பிடிக்கும். அமைதியான வாழ்க்கையையே அதிகம் விரும்புவீர்கள்.
தெளிந்த அறிவுடனும் அதி நுட்ப மதியுடனும் எந்த ஒரு செயலை யும் செய்வீர்கள். ஆடை, அணிகலன்களில் தனிக் கவனம் செலுத்து வீர்கள். எப்போதும் நேர்மையாக இருப்பதையே விரும்புவீர்கள். பேச்சில் ஒளிவு மறைவு என்பதே இருக்காது.
உங்களுக்குப் பழைய பிரச்னைகள் பலவும் தீரும். இதுவரை உங்களுக்குத் தொல்லை கொடுத்து வந்த வில்லங்க விவகாரங்கள் தீர்ந்து, உங்களுக்கு நன்மைகள் ஏற்படும். தொழிலில் எதிர்பாராத லாபங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வும், ஊதிய உயர்வும் இப்போது வந்து சேரும். அதேநேரம், சிலருக்கு விரும்பத் தகாத இடமாற்றம் வந்து சேரலாம். எனினும், ஏற்றுக்கொள்ளுங்கள் முடிவு உங்களுக்குச் சாதகமாகவே அமையும்.
உறவினர்களால் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக தாய்வழிச் சொந்தங்களுடன் மனத்தாங்கல் உண்டாகும். அவர்களிடம் அதிகம் உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். தாயாரின் உடல்நலனில் அக்கறை செலுத்துங்கள். வண்டி-வாகனங் களும் செலவு வைக்கும். வீடு, கடை போன்ற சொந்த கட்டடங்கள் சார்ந்து பராமரிப்புச் செலவுகள் ஏற்படும். தந்தை வழியிலும் அவர் வழி உறவுகளாலும் சிற்சில பிரச்னைகள் உண்டாகலாம்.
தொழில் ரீதியாக புதியவர்கள், அந்நிய மனிதர்களிடம் அதிக நம்பிக்கை வைக்கவேண்டாம். அவர்களுடனான ஒப்பந்தங்களைச் சற்றுத் தள்ளிப்போடவும். மற்றபடி வீட்டில் சுபகாரியங்களில் தடைகள் நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே மகிழ்ச்சி நிறைந்திருக்கும். பிள்ளைகளால் சமுகத்தில் மதிப்பு உயரும்.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை. 7, 14, 16
சந்திராஷ்டமம்: ஜூலை. 9
பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு லட்டு படைத்து, மல்லிகைப் பூக்களார் அர்ச்சித்து வழிபடுங்கள்; வளம் பெருகும்.
மிருகசீரிடம்:
இந்த நட்சத்திரம் அங்காரக சாரம் பெற்ற நட்சத்திரம். இதில் பிறந்த நீங்கள், அசாத்தியத் துணிவு உள்ளவர்களாக, எதற்கும் பயப்படாத வர்களாக, திடமான நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பீர்கள். விரிந்த நெற்றியும் பரந்த தோள்களும் இருக்கும். உங்களில் பலரும் கற்பனை வளம் மிகுந்தவர்களாகவும் கவிதை, கட்டுரைகள் எழுதுபவர்களாகவும் திகழ்வீர்கள்.
உயர்ந்த பண்பும் தாய், தந்தையிடம் அதிக பாசமும் இருக்கும். தவறைக் கண்டால் தயக்கமின்றித் தட்டிக் கேட்பீர்கள். அபார நினைவாற்றல் இருக்கும். கல்வியைக் காட்டிலும் மற்றவற்றில் நாட்டம் அதிகமிருக்கும்.
உங்களுக்கு, உச்சகுருவுடன் சூரியன் சஞ்சரிக்கும் இந்த ஆடி மாதத்தில், மனைவியின் மீது அன்பு அதிகரிக்கும். இருப்பினும் அவருடைய உடல்நலத்தில் கவனம் தேவை. மனைவி மற்றும் மனைவி வழி உறவினர்களால் நன்மைகள் கிடைக்கும். மனதில் காரணமற்ற பயம் தோன்றலாம். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும் வாய்ப்பு உள்ளது. எனவே வருமானத்தை விட செலவுகளைக் கட்டுப்படுத்துவ தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கலாம். புத்திர, புத்திரிகள் முன்னேற்றம் அடைவார்கள். ஆனால் திருமணம் அல்லது தொழில் காரணமாக உங்களை விட்டுப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகலாம்.
தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்களால் தக்க நேரத்தில் உதவிகள் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றமும் வருமானமும் கிடைக்கும்.
அவ்வப்போது தடைகள், தாமதங்கள் ஏற்படலாம். பயணங்கள் அதிகரிக்கும். பயணங்களின்போது கவனமாக இருக்கவேண்டும். சிறிய காயங்கள் ஏற்படலாம். சிலருக்குச் சிறுசிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலையும் உருவாகலாம்.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை- 16; ஆகஸ்ட்-7
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை - செவ்வாய் ஓரையில், முருகப்பெருமானுக்குச் செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல் படைத்து வணங்குங்கள்; தடைகள் விலகும்.
திருவாதிரை:
திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் குறித்து ‘கீர்த்தி மான்... சுத்தவான், உயர்ந்திருக்குந் துண்டமுள்ளான்...’ என்றும் `சொத்து விற்பது, வாங்குவதில் வல்லவர்கள்’ என்றும் பழம்பெரும் ஜோதிடநூல்கள் விவரிக்கின்றன.
நீங்கள் சந்தர்ப்ப சூழ்நிலைக்குத் தகுந்தாற் போல் பேசுபவர்களாக, பலசாலிகளாக, எளிதில் கோபவசப்படக் கூடியவர்களாக இருப்பீர்கள். ஆதலால், மற்றவர் பார்வைக்கு முரட்டு சுபாவம் உள்ளவர்போல் தெரிவீர்கள். சிறந்த அறிவாற்றலும் பகைவர்களை வெற்றிகொள்ளும் சூரத்தனமும், எடுத்த காரியத்தை சிறப்பாக முடிக்கும் பிடிவாதமும் உங்களிடம் நிரம்பியிருக்கும்.
உங்களுக்கு, உச்சகுருவுடன் சூரியன் சஞ்சரிக்கும் இந்த ஆடி மாதத்தில், புத்திசாலித்தனமும் புதிய சிந்தனைகளும் அதிகரிக்கும் காலம் இது. எதிர்பாராத பணவரவு கிடைக்கும். ஏஜென்சி, ஸ்டேஷனரி, கல்வித்துறையில் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். இருப்பினும் மனதில் காரணமற்ற பயமும் தயக்கமும் நிலைத்திருக்கும்.
உடல்நலத்தில் கவனம் தேவை. மனக்கலக்கம், அச்சம் போன்ற உணர்வுகள் அவ்வப்போது ஏற்படலாம். யோகா, தியானப் பயிற்சிகளில் ஈடுபடுங்கள்.
சிலருக்குத் தந்தையால் தொழில்ரீதியான நன்மைகள் கிடைக்க லாம். அதேநேரத்தில் அவரால் சில தொல்லைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பயணங்கள் அதிகரிக்கும். ஓய்வும் உறக்கமும் குறையலாம். பயணங்களின்போது மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும்.
பேச்சில் நிதானம் அவசியம். சில நேரங்களில் நல்ல நோக்கில் கூறும் வார்த்தைகளே தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு பிரச்சனை களை ஏற்படுத்தலாம். சகோதரர்களுடனும் கவனமாகப் பழக வேண்டும். இல்லையெனில் தேவையற்ற செலவுகள், பகைமை, பிரச்னைகள் உருவாகலாம்.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை - 27; ஆகஸ்ட்-12
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில், துர்கை அம்மனுக்கு நெய்தீபம் ஏற்றிவைத்து வணங்குங்கள். முன்னேற்றம் உண்டாகும்.
புனர் பூசம்:
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், உடலநலனில் அக்கறை உள்ளவர்களாகவும்,லைப் பாதுகாப்பவராகவும் சாத்வீகக் குணம் உடையவராகவும் இருப்பார்கள் என்கிறது. ஜாதக அலங்காரம், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருத்தமாகப் பேசுபவர்கள்; பருத்தத் தோள்களை உடையவர்கள்; அதிக தூரம் நடப்பவர்கள் என்கிறது.
தனகாரகன், புத்திகாரகன், புத்திரக்காரகன், வேதவித்தகன் என்றெல்லாம் அழைக்கப்படும் குருவின் சாரம் பெற்றுள்ளது இந்த நட்சத்திரம். இதில் பிறந்த நீங்கள், சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வாழ்வீர்கள். உங்களிடம் தெய்விகம் நிறைந்திருக்கும். இரக்கக் குணம் கொண்டிருப்பீர்கள். ஆனால், எளிதில் உணர்ச்சிவசப்படுவீர்கள். தன்மானம் மிகுந்தவர்கள். பட்டினி கிடக்க நேர்ந்தாலும் சத்தியம் பிறழ மாட்டீர்கள்.
உங்களுக்கு, உச்சகுருவுடன் சூரியன் சஞ்சரிக்கும் இந்த ஆடி மாதத்தில்,பழைய கடன்கள் அடையும் வாய்ப்பு உள்ளது. ஆனால் கிடைக்கும் வருமானம் பெரும்பாலும் கடன்களை அடைப்பதற்கே செலவாகலாம். எனினும் மனம் தளரவேண்டாம். புதுப்புது வரவுகளுக்கு ஏற்ற வழிவகைகள் ஏற்படும்.
சிலருக்குக் கண் தொடர்பான பாதிப்புகள் ஏற்படக்கூடும். மனைவி மற்றும் மனைவி வழி உறவினர்களால் நன்மைகளும் பொருளாதார முன்னேற்றமும் கிடைக்கும்.பிள்ளைகளால் நன்மை, வருமானம், குடும்ப மகிழ்ச்சி ஆகியவை அதிகரிக்கும். கடந்த காலத்தை விட உடல்நலமும் மனநலமும் மேம்படும். மன உறுதியும் தைரியமும் அதிகரிக்கும்.
தொழில் ரீதியாக சில சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். அந்நிய மனிதர்களால் சில தொல்லைகளும் பிரச்னைகளும் ஏற்படலாம். எனவே, புதியவர்களிடம் எச்சரிக்கையுடன் பழக வேண்டும். உடன் பணிபுரியும் அன்பர்களிடம் அதிகம் உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம்.
தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. சிறுசிறு உடல் உபாதைகள் ஏற்படலாம். வாழ்க்கையின் சுகங்களை முழுமையாக அனுபவிக்க முடியாத சூழ்நிலைகள் உருவாகலாம். எனினும் அடுத்தடுத்த மாதங்களில் சாதகமான சூழல் உருவாகும். பொறுமையுட னும் எச்சரிக்கையுடனும் செயல்பட்டால், காரியவெற்றிகள் கைகூடும்.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 30; ஆகஸ்ட்-14
பரிகாரம்: வியாழக்கிழமைகளில் சிவாலயங்களுக்குச் சென்று தென்முக தெய்வமாம் தட்சிணாமூர்த்தி பகவானை வழிபட்டு வாருங்கள்; குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.