📅 Sunday, 27 September 2026 IST | புரட்டாசி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 27, 2026 09:04 AM

"20 ஆண்டுகளாக இந்தியாவில் ஜெயிக்கவில்லை என்பது..".. வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் பேச்சு

"20 ஆண்டுகளாக இந்தியாவில் ஜெயிக்கவில்லை என்பது..".. வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் பேச்சு

"20 ஆண்டுகளாக இந்தியாவில் ஜெயிக்கவில்லை என்பது..".. வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் பேச்சு

திருவனந்தபுரம்: இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 27 அன்று தொடங்குகிறது. பலம் வாய்ந்த இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம் என வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் கூறி இருக்கிறார். 2002 ஆம் ஆண்டு தான் வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசியாக இந்திய மண்ணில் ஒருநாள் தொடரை வென்றது. அதன் பின் ஒருமுறை கூட ஒருநாள் தொடரை கைப்பற்றவில்லை.

இது பற்றி செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஷாய் ஹோப், "இந்திய அணியை அவர்களின் சொந்த மண்ணில் சந்திப்பது எப்போதும் கடினமான சவால்தான். சர்வதேச கிரிக்கெட்டில் நாம் எந்தத் தரத்தில் இருக்கிறோம் என்பதை சோதித்துப் பார்க்க இது மிகச் சிறந்த களம். உலகின் தலைசிறந்த அணியை அவர்களின் சொந்த ஆடுகளங்களில் வீழ்த்துவதே எங்களின் விருப்பம். ஆஸ்திரேலியா அல்லது கரீபியன் தீவுகளை விட இந்தியாவில் முற்றிலும் மாறுபட்ட நுணுக்கங்களுடன் விளையாட வேண்டும். திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்தினால் நிச்சயம் சாதிக்கலாம்" என்று கூறினார்.

இந்திய மண்ணில் ஷாய் ஹோப் சிறப்பான பேட்டிங் செயல்பாட்டை வைத்துள்ளார். இந்தியாவில் அவர் விளையாடிய 14 ஒருநாள் போட்டிகளில் 3 சதங்கள் மற்றும் 3 அரைசதங்களுடன் 741 ரன்கள் குவித்து 74.1 என்ற வியக்கத்தக்க சராசரியைக் கொண்டுள்ளார். ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கு எதிராக 26 போட்டிகளில் 988 ரன்கள் விளாசியுள்ளார்.

கடந்த 2002-ம் ஆண்டு கார்ல் ஹூப்பர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி 4-3 என்ற கணக்கில் இந்தியாவில் தொடரை வென்றது. அதற்குப் பிறகு கடந்த 24 ஆண்டுகளாக இந்திய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியதே இல்லை.

இந்த நீண்ட கால தோல்விப் பாதை குறித்துப் பேசிய ஹோப், "இந்தியாவில் நாம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருநாள் தொடரை வெல்லவில்லை என்ற உண்மை எங்களுக்கு கூடுதல் வெறியையும் உத்வேகத்தையும் தருகிறது" என்றார்.

மேலும் ரோஸ்டன் சேஸ், குடாகேஷ் மோட்டி, இளம் வீரர் விட்டல் லாவ்ஸ் அடங்கிய தங்களது சுழற்பந்து வீச்சு கூட்டணி இந்திய பேட்டர்களுக்குப் பெரும் சவாலாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்ஷாய் ஹோப்.