வெல்லட்டும் வேளாண்மை; கோவையில் வேளாண் வணிகத் திருவிழா; விவசாயிகள், தொழில்முனைவோர் மகிழ்ச்சி
கோவை: 'தினமலர்' நாளிதழ் சார்பில் விவசாயிகளைக் கொண்டாடும் வகையில், 'வெல்லட்டும் வேளாண்மை' வேளாண் வணிகத் திருவிழா, கோவை, ஸ்ரீ ராம கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியில் நேற்று நடந்தது.

வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்வளர் காப்பக நிபுணர்களின் உதவியோடு, லாபகரமான விவசாயம், வேளாண் தொழில்முனைவை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த நிகழ்ச்சியை, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சங்கேத் வாகே பல்வந்த் திறந்து வைத்து பார்வையிட்டார். கண்காட்சியில் இடம்பெற்றிருந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களிடம், அவர்களின் தயாரிப்பு பொருட்கள் குறித்து விசாரித்து அறிந்தார்.

சுகுணா பம்ப்ஸ் அண்ட் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குநர் லட்சுமிநாராயணசாமி, புரோசன் சோலார் நிர்வாக இயக்குனர் தனவேல், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் சிவகுமார், அய்யப்பா பிளாஸ்டிக்ஸ் நிர்வாக இயக்குநர் கனகராஜ், வேளாண் வணிக மேம்பாட்டு இயக்கக இயக்குனர் சோமசுந்தரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

கோவை, திருப்பூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து, விவசாயிகள் மற்றும் தொழில்முனைவில் விருப்பம் கொண்டவர்கள் ஆர்வமாக பங்கேற்று, அரசின் திட்டங்கள், தொழில்முனைவுக்கான வாய்ப்புகள் குறித்து கேட்டறிந்தனர். வேளாண் தொழில்நுட்ப வணிக காப்பகம், அய்யப்பா பிளாஸ்டிக் நிறுவனம், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி இணைந்து

வழங்கின. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு, சொட்டு நீர் பாசனத்துக்கான உபகரணங்கள் மாதிரி 'கிட்' வழங்கப்பட்டது.

நஞ்சில்லா உணவுக்கு உத்தரவாதம்

கருத்தரங்கில், நஞ்சில்லா உணவு குறித்து, வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குனர் சோமசுந்தரம் பேசியதாவது: நம் உணவுகளில் நம்மை அறியாமலேயே, பல்வேறு வழிகளில் நஞ்சுகள் கலக்கின்றன. பூச்சிக் கொல்லிகளில் இருந்து, பதப்படுத்தப்பட்ட பொருட்களை அவற்றின் காத்திருப்புக் காலத்தை நீட்டிப்பதற்காக பயன்படுத்தப்படும் பொருட்கள் வரை உணவை நஞ்சாக்குகின்றன.

உலக நாடுகள் நமது வேளாண் பொருட்களைப் பார்த்து அஞ்சுவதற்கு, அவற்றில் இருக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடிய பொருட்களே காரணம். உணவுப் பொருட்களில் உள்ள கடின உலோகங்கள், நஞ்சுயிரிகள், அலர்ஜன்ஸ் ஆகியவை உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கின்றன.

பெரும்பாலான களைச்செடிகள் மூலிகைகள். அவற்றை களைக்கொல்லிகளால் இல்லாமல் செய்துவிடுகிறோம். துரித உணவுகளில் பயன்படுத்தப்படும் நிறமிகளில் 'சூடான்' என்ற நஞ்சு இருக்கிறது. காஷ்மீர் குங்குமப்பூவில் இருந்து குமரியின் குச்சிக்கிழங்கு வரை இந்தியாவில் நல்லுணவுகள் விளைந்தாலும் நஞ்சில்லா உணவை நாம் உண்பதில்லை.

எனவே, இயற்கை விவசாயத்தின் வாயிலாக, நஞ்சில்லா உணவைப் பெறலாம். மண் வளத்தில் இருந்து பூச்சி, நோய் கட்டுப்பாடு வரை இயற்கை முறையைப் பின்பற்றலாம்.வேளாண் பல்கலையில் நம்மாழ்வார் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையம் உள்ளது. அங்கு அளிக்கப்படும் பயிற்சியில் விவசாயிகள் பங்கேற்கலாம்.

வேளாண் பல்கலையின் இணையதளத்தில், 250 பக்கங்கள் இயற்கை விவசாயத்துக்காகவே அர்ப்பணிக்கப் பட்டுள்ளது. நஞ்சில்லா உணவு காலத்தின் கட்டாயம். இயற்கை விளைபொருட்களின் விலை சற்று அதிகமாக இருக்கலாம். அதை வாங்கும் சக்தி அனைவருக்கும் இருக்கிறது. மருத்துவத்துக்குச் செலவிடுவதை விட உணவுக்குச் செலவிடலாம். இயற்கை, அங்கக வேளாண்மை விளைபொருட்களை நோக்கி நாம் நகர வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

* நிகழ்வின் ஒருபகுதியாக, 40க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் ஸ்டால்கள் இடம்பெற்றிருந்தன. இங்கு, வேளாண் சார்உற்பத்தி பொருட்கள், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள், இடுபொருட்கள் காட்சிப்படுத்தப் பட்டிருந்தன. * சிறுதானியங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட பிஸ்கட், அவல், இனிப்புகள், ஹெல்த் மிக்ஸ் பவுடர், குளிர்பானங்கள், தேங்காயில் இருந்து தயாரிக்கப்பட்ட திண்பண்டங்கள், எண்ணெய் இல்லாத தேங்காய் சிப்ஸ் அரங்குகளில், மக்கள் விரும்பி வாங்கி சென்றனர். * மூங்கிலில் இருந்து தயாரிக்கப்பட்ட சானிட்டரி நாப்கின், மூங்கில், வேப்பமரத்தால் செய்யப்பட்ட அலங்காரப்பொருட்கள், மூங்கிலில் தயாரிக்கப்பட்ட 'தெரபி' கருவிகள் தனிகவனம் பெற்றன. * எலி, பாம்பு, கொசுக்களுக்கான இயற்கை விரட்டி, காய்கறி, பழங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட அழகுசாதன பொருட்கள் அரங்கில் இடம்பெற்றன. * குப்பையில் இருந்து புழுக்களை உருவாக்கி, அப்புரதங்களை கால்நடை உணவாக மாற்றும் தொழில்நுட்பம், விவசாயிகளிடம் தனி வரவேற்பை பெற்றது. * அரிசி, தானியங்களில் பூச்சிகள் வருவதை தடுக்கும் யு.வி., லைட் கருவி, களை எடுக்கும் கருவி, தேங்காய் மட்டை உரிக்கும் கருவி, பேட்டரி டில்லர் கருவிகளின் செயல்பாடுகளை ஆர்வ முடன் கேட்டறிந்தனர்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, வேளாண் தொழில்நுட்ப வணிகக் காப்பகத்தின் உதவியோடு வெற்றிகரமான ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உருவாக்கியவர்கள், தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். 75 வகையான சிறுதானிய உணவு, மூங்கில் இழைகளால் ஆன சானிடரி நாப்கின், தேங்காய் சிப்ஸ், ஆயுர்வேத மருந்து மற்றும் அழகுசாதனங்கள், பயிரில் வேரின் ஈரப்பதம் அறிந்து நீர், உரம் வழங்கும் தானியங்கி சாதனம், நறுமண எண்ணெய், தானியங்களைச் சேமிக்கும்போது வரும் செல் பூச்சிகளுக்கான தீர்வு என பல்வேறு தொழில்களை மேற்கொள்வது குறித்தும், அதற்கான அரசுத் திட்டங்கள், வழிகாட்டல்களைப் பெற்றது குறித்தும் அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

கோவை வேளாண் பல்கலை -பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மையம் பேராசிரியர் அமுதா பேசியதாவது: உரிய பருவத்தில் உகந்த நெல் ரகத்தை மட்டும் பயிரிட்டால், அதிக மகசூல் பெற முடியும். குறுகியகால ரகங்களில் சொர்ணவாரி, கார், குறுவை, நவரை பட்டங்களில், 'கோ 54' பயிரிடலாம். பொள்ளாச்சியில் 9 டன் வரை மகசூல் எடுத்துள்ளனர். கோ 55 ரகம் 6 டன் விளையும். மொத்த மகசூலை மட்டும் கணக்கில் கொள்ளக்கூடாது. அரவைத் திறன், முழு அரிசி காணும் திறனையும் பார்க்க வேண்டும். ஏ.டி.டி., 57, விழுப்புரத்தில் 9 டன் வரை எடுத்துள்ளனர். இது ஏ.டி.டி. 43 ரகத்துக்கு மாற்று. டிபிஎஸ் 5 ரகம் இட்லி குண்டு ரகம் அதிக மாவுத்திறன் கொண்டது. ஏ.டி.டி., இட்லி குண்டு ரகத்தை தாளடி பருவத்திலும் சாகுபடி செய்யலாம். நமது பாரம்பரிய ரகங்களை இழந்துவிடக்கூடாது என்பதற்காக அவற்றைப் பாதுகாக்கும் முயற்சியில் அசலான ரகங்களை அடையாளப்படுத்தி தொகுத்து வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

பயனுள்ள நிகழ்ச்சி; பார்வையாளர் மகிழ்ச்சி