📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports June 08, 2026 02:30 PM

501 ரன் அடித்த இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேனுக்கு டி20 அணியில் இடமில்லை.. ஹர்பஜன் சிங் அதிருப்தி

501 ரன் அடித்த இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேனுக்கு டி20 அணியில் இடமில்லை.. ஹர்பஜன் சிங் அதிருப்தி

501 ரன் அடித்த இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேனுக்கு டி20 அணியில் இடமில்லை.. ஹர்பஜன் சிங் அதிருப்தி

டெல்லி: அயர்லாந்து, இங்கிலாந்து டி20 தொடர்கள் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் புறக்கணிக்கப்பட்டதற்கு முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் 16 பேர் கொண்ட புதிய டி20 அணியை அறிவித்தது. இதில் ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டார். சூர்யகுமார் யாதவ் அதிரடியாக நீக்கப்பட்டார். மேலும் 15 வயது வீரரான வைபவ் சூர்யவன்ஷி தேசிய அணிக்குத் தேர்வாகி சாதனை படைத்தார். இந்த அணித் தேர்வுகள் ஒருபுறம் பேசுபொருளாகியுள்ள நிலையில், ஐபிஎல் தொப்படாதது பெரும் விவாதத்தைக் கிளப்டரில் சிறப்பாகச் செயல்பட்ட ரஜத் படிதார் எந்தவொரு தொடரிலும் சேர்க்கபியுள்ளது.

நடப்பு 2026 ஐபிஎல் தொடரில் ரஜத் படிதார் பெங்களூரு அணிக்கு தொடர்ந்து 2-வது முறையாக கோப்பையை வென்று கொடுத்துள்ளார். ரோஹித் சர்மா மற்றும் எம்.எஸ்.தோனி ஆகியோருக்குப் பிறகு தொடர்ந்து 2 முறை கோப்பையை வென்ற 3-வது கேப்டன் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். பேட்டிங்கிலும் மிரட்டிய அவர், 14 இன்னிங்ஸ்களில் 192.69 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 501 ரன்கள் குவித்து அசத்தினார்.

இவ்வளவு சிறப்பாக விளையாடியும் அவர் அணியில் சேர்க்கப்படாதது குறித்து ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறுகையில், "இந்திய அணியில் ரஜத் படிதாருக்கு இடம் கிடைக்காதது மிகவும் வருத்தமளிக்கிறது. தேசிய அணியில் இடம்பிடிக்க அவர் வேறு என்னதான் செய்ய வேண்டும்? 501 ரன்கள் குவித்துள்ளார், அவரது ஸ்ட்ரைக் ரேட் கிட்டத்தட்ட 200 ஆக உள்ளது. அவரைத் தேர்வு செய்யாதது முற்றிலும் அநீதியானது. இந்திய அணியின் நடுத்தர வரிசைக்கு அவர் மிகவும் தகுதியான வீரர். நல்ல பேட்டிங் நுட்பம் கொண்ட ஒரு சிறந்த அதிரடி ஆட்டக்காரர் அவர்" என்று அவர் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

ரஜத் படிதார் போன்ற திறமையான வீரர்கள் புறக்கணிக்கப்பட்டது குறித்து தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார். "அணித் தேர்வின்போது நாங்கள் பல வீரர்களின் ஆட்டத்திறன் குறித்து விரிவாக விவாதித்தோம். தற்போதுள்ள 15 வீரர்கள் தகுதியானவர்கள் என்று கருதுகிறோம். இந்தியாவில் ஏராளமான சிறந்த வீரர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் அணியில் நுழையத் தகுதியானவர்கள்தான்.

ஆனால், தற்போது விளையாடும் வீரர்கள் தங்களால் முடிந்தவரை சிறப்பாகச் செயல்படுகிறார்கள். நாங்கள் ஒரு சிறந்த அணியைத் தேர்ந்தெடுத்துள்ளோம் என்பதில் திருப்தி அடைகிறோம். சிறந்த அணியை உருவாக்கும்போது சில வீரர்கள் விடுபடுவது தவிர்க்க முடியாதது" என்று அவர் கூறினார்.