📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 01, 2026 12:03 PM

9 சதவீத மாணவர்களுக்கு உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணம்; உச்ச நீதிமன்ற குழு ஆய்வில் தகவல்

9 சதவீத மாணவர்களுக்கு உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணம்; உச்ச நீதிமன்ற குழு ஆய்வில் தகவல்

ETV Bharat / education-and-career

9 சதவீத மாணவர்களுக்கு உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணம்; உச்ச நீதிமன்ற குழு ஆய்வில் தகவல்

சமீபத்தில் முதன்மையான கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவம் நடைபெற்ற நிலையில், இந்த ஆய்வின் முடிவு முக்கிய கவனம் பெற்றுள்ளது.

Published : September 30, 2026 at 6:02 PM IST

புதுடெல்லி: உயர்கல்வி பயிலும் மாணவர்களில் 9 சதவீத பேருக்கு உயிரை மாய்த்துக் கொள்ளும் எண்ணம் ஏற்படுவதாக உச்ச நீதிமன்றம் அமைத்த குழு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் மனநலம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்ய கடந்த ஆண்டு மார்ச் மாதம் உச்ச நீதிமன்றத்தால் தேசியப் பணிக்குழு (NTF) அமைக்கப்பட்டது.

நீதிபதி எஸ். ரவீந்திர பட் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழுவில் உளவியல் நிபுணர் உட்பட பல்துறை நிபுணர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இக்குழு தமிழ்நாடு, டெல்லி, கர்நாடகா, அசாம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களிடையே ஆய்வு மேற்கொண்டது.

இந்த ஆய்வில் சுமார் 2.43 லட்சம் மாணவர்களிடமிருந்து பதில்கள் பெறப்பட்ட நிலையில், அதில் 67 சதவீதம் பேர் எஸ்சி, எஸ்டி மற்றும் ஒபிசி வகுப்பை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் முழுமையான அறிக்கை அக்டோபர் இறுதியில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், ஆய்வில் கண்டறியப்பட்ட சில முக்கிய தரவுகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, கடந்த ஆண்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்களில் 9 சதவீத பேருக்கு உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணம் ஏற்பட்டதாகவும், சுமார் 15 சதவீத பேர் கடந்த ஆறு மாதங்களில் மிகுந்த மன அழுத்தத்தை எதிர்கொண்டதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

மூத்த அதிகாரி ஒருவர் அளித்த தகவலின்படி, மாணவர்கள் தாங்கள் மிகுந்த மன சோர்வு அல்லது அழுத்ததை உணர்ந்ததாகவும், அது பல வாரங்களுக்கு நீடித்ததாகவும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக 34 சதவீத மாணவர்கள் தாங்கள் கல்லூரியில் ஒதுக்கப்படுவதாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

தீவிரமான பிரச்சனைகளை கல்லூரி நிர்வாகம் நியாயமான முறையில் கையாளும் என்பதில் 56 சதவீத மாணவர்கள் நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதே வேளை, 32 சதவீதம் பேர் நிர்வாகத்தின் மூலம் ஆலோசனை சேவை வழங்கப்படுவது இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களுக்கு அழுத்தம் ஏற்பட காரணம் என்ன?

சமீபத்தில் முதன்மையான கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவம் நடைபெற்றுள்ள நிலையில், இந்த ஆய்வின் முடிவு முக்கிய கவனம் பெற்றுள்ளது.

இந்த ஆண்டு இக்குழு தாக்கல் செய்த இடைக்கால அறிக்கையில், மாணவர்கள் சமூக மற்றும் பாலியனரீதியாக வேறுப்பாட்டை எதிர்கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவைமட்டுமின்றி, கல்விக்கு பின்னர் வேலைவாய்ப்பை நினைத்தும் மாணவர்கள் கவலை கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வருகைப் பதிவு, மருத்துவப் படிப்பில் அதிக நேரம் பணி, பொறியியல் கல்லூரிகளில் பிளேஸ்மெண்ட் அழுத்தம், மாநில பல்கலைக்கழகங்களில் போதிய ஆசிரியர்கள் இல்லாமை, பல் மருத்துவம், நர்சிங், மன நிலை சாரந்த கல்வி நிறுவனங்களில் போதிய பயிற்சி இல்லாமை, முனைவர் படிப்பில் மேற்பார்வையாளர் மூலம் போதுமான ஆலோசனை வழங்கபடாதது அல்லது அதிக கட்டுபாடுகள் விதிப்பது உள்ளிட்டவை முக்கிய பிரச்சனைகளாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

உடனடி நடவடிக்கை தேவை

மாணவர்களிடம் அதிகரித்து வரும் மனநிலை பாதிப்பை கருத்தில் கொண்டு, உடனடியாக உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் ஆதரவு அமைப்பை உருவாக்குவது அவசியம் என அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக மாணவர்கள் சார்ந்த கற்றல் மற்றும் கற்பித்தல் சூழ்நிலையை உருவாக்க ஆசிரியர்களுக்கான பயிற்சி, நெருக்கடி காலச் செயல்பாட்டு நடைமுறைகள், வெளிப்படையான நிர்வாகத்தை உருவாக்குதல் உள்ளிட்டவை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் எனவும் வலியுறுத்துகிறார்.

’தற்கொலை எதற்கும் தீர்வு அல்ல’

வாழ்வதற்கு புது நம்பிக்கையைப் பெற தமிழ்நாடு அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-ஐ தொடர்பு கொண்டு பேசலாம். இதேபோல், சிநேகா தொண்டு நிறுவனத்தை +91 44 2464 0050, +91 44 2464 0060 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாகவோ, அல்லது help@snehaindia.org என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவிகளை பெறலாம். டாடா நிறுவனத்தின் 91529 87821 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளைப் பெறலாம்.