📅 Friday, 14 August 2026 IST | ஆடி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 14, 2026 11:03 AM

 அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க முடியாது: 'மாஜி'க்கள் வேலுமணி, விஸ்வநாதன் போர்க்கொடி

 அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க முடியாது: 'மாஜி'க்கள் வேலுமணி, விஸ்வநாதன் போர்க்கொடி

கோவை: 'அ.தி.மு.க., சார்பில் இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க முடியாது' என அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, விஸ்வநாதன் ஆகியோர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசை கண்டித்தும், பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்யுமாறு த.வெ.க., அரசை வலியுறுத்தியும், தமிழகம் முழுதும் அ.தி.மு.க., சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

ஆர்ப்பாட்டத்துக்கு ராமநாதபுரத்தில் விஸ்வநாதன், தேனியில் வேலுமணி, சேலத்தில் தங்கமணி, ராணிப்பேட்டையில் அன்பழகன் தலைமை வகிப்பர் என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்திருந்தார்.

ஆனால், வேலுமணி, விஸ்வநாதன் ஆகியோர், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க இயலாது என தெரிவித்துள்ளனர்.

அவர்களின் கூட்டறிக்கை:

கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட் டோருக்கு, அவரவர் வகித்த பொறுப்புகள் திரும்ப வழங்கப்படும் என, பொதுச் செயலர் பழனிசாமி உறுதியளித்தபடி மீண்டும் வழங்கவில்லை.

இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில், எங்களை புறக்கணிக்கும் வகையில், விஸ்வநாதன், வேலுமணி, தங்கமணி, அன்பழகன் ஆகியோர் அவரவர் சொந்த மாவட்டங்களில் தலைமையேற்பதை தவிர்த்து, வேண்டுமென்றே வெவ்வேறு மாவட்டங்களுக்கு நியமித்தது ஏற்புடையதல்ல .

எனவே, அ.தி.மு.க., நடத்தும் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தருகிறோம். ஆனால், வேறு மாவட்டங்களுக்கு சென்று ஆர்ப்பாட் டத்தில் பங்கேற்க முடியாது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.