📅 Sunday, 18 October 2026 IST | ஐப்பசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports October 18, 2026 09:03 PM

ஆள விடுங்கடா சாமி.. இதுக்கு மேல போராட முடியாது.. ரஞ்சி டிராபியில் ஆடாமல் தவிர்த்த முகமது ஷமி!

ஆள விடுங்கடா சாமி.. இதுக்கு மேல போராட முடியாது.. ரஞ்சி டிராபியில் ஆடாமல் தவிர்த்த முகமது ஷமி!

ஆள விடுங்கடா சாமி.. இதுக்கு மேல போராட முடியாது.. ரஞ்சி டிராபியில் ஆடாமல் தவிர்த்த முகமது ஷமி!

மும்பை: நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான டெஸ்ட் தொடரில் முகமது ஷமி சேர்க்கப்படாத நிலையில், அவர் ரஞ்சி டிராபி தொடரில் பெங்கால் அணிக்காக களமிறங்காமல் தவிர்த்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் முகமது ஷமி விரக்தியில் இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் முகமது ஷமி மீண்டும் அணியில் சேர்க்கப்படவில்லை. முதலில் காயத்தால் முகமது ஷமி சேர்க்கப்படவில்லை என்றாலும், தனது ஃபிட்னஸை நிரூபித்த பின்னரும் கூட ஷமியை சேர்க்காமல் இந்திய அணி நிர்வாகம் தவிர்த்து வருகிறது. இதுதொடர்பாக பிசிசிஐ நிர்வாகமும் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

அஜித் அகர்கர் தேர்வுக் குழு தலைவராக இருந்த போதும் அவர் தரப்பில் பதில் அளிக்கப்படவில்லை. இருப்பினும் மனம் தளராத முகமது ஷமி, தொடர்ச்சியாக ரஞ்சி டிராபி, ஐபிஎல், துலீப் டிராபி, இராணி கோப்பை என்று விளையாடி வருகிறார். குறிப்பாக இராணி கோப்பையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்காக களமிறங்கிய அவர், 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதேபோல் ரஞ்சி டிராபி தொடரின் புதிய சீசன் தொடங்கப்பட்டுள்ள சூழலில் பெங்கால் அணிக்காக ஆடிய முதல் போட்டியில் டெல்லி அணி பேட்ஸ்மேன்களை திணறடித்தார். 4 விக்கெட்டுகளை கைப்பற்றி முகமது ஷமி தனது ஃபார்மையும் நிரூபித்தார். இதனிடையே இந்திய டி20 அணியில் புவனேஷ்வர் குமார் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

இதனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் அல்லது டெஸ்ட் அணியில் தமக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று முகமது ஷமி நம்பிக்கையோடு இருந்தார். ஆனால் இந்திய அணி முகமது ஷமியை மீண்டும் புறக்கணித்துவிட்டது. பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப் உள்ளிட்டோரையே மீண்டும் தேர்வு செய்துள்ளது. இதனால் முகமது ஷமி அதிருப்தி அடைந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் ரஞ்சி டிராபி தொடரில் சர்வீஸஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்கால் அணி களமிறங்கியது. இந்த அணியில் முகமது ஷமி களமிறங்கவில்லை. முகமது ஷமிக்கு காயம் ஏதும் இல்லை. இருப்பினும் அவர் விளையாடாமல் தவிர்த்திருப்பதாக தெரிகிறது. இதனால் பிசிசிஐ நிர்வாகத்துடன் போராடுவது வீண் என்று முகமது ஷமி முடிவு செய்துவிட்டதாக ரசிகர்களிடையே பேச்சுகள் எழுந்துள்ளன.