ஆந்திர அமைச்சரவையில் குவாண்டம் மையத்திற்கு ஒப்புதல்
அமராவதியில் ரூ.1,002.49 கோடி செலவில் குவாண்டம் தொழில்நுட்ப மையம் அமைக்க ஆந்திர மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அமராவதியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 34 அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதில், 36 மாடிகள் கொண்ட இரட்டைக் கோபுரக் கட்டடங்களாக இக்குவாண்டம் தொழில்நுட்ப மையத்தைக் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் எல் அண்ட் டி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
பெண்கள் பாதுகாப்புக்கான திசா-2019 சட்டத்தை ரத்து செய்துவிட்டு, புதிய பாதுகாப்பு சட்ட மசோதா இயற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நகராட்சி, மாநகராட்சிக்குச் சொந்தமான வாடகை இடங்களுக்குக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இரண்டு புதிய தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
புதிய மாவட்டங்களுக்கு 15 புதிய மாவட்டக் கல்வி அதிகாரிகள் நியமனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
புதிய சட்டப்பேரவை, உயர் நீதிமன்றத்தைக் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
`அமராவதி ஐ’ திட்டத்துக்கு மறு ஏலக் குத்தகை வெளியிடத் தீர்மானிக்கப்பட்டது.