📅 Tuesday, 11 August 2026 IST | ஆடி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 11, 2026 06:04 PM

ஆர்.பி. உதயகுமாரின் பேச்சுக்கு எதிர்ப்பு: தூத்துக்குடி போலீசில் தவெக நிர்வாகி புகார்

ஆர்.பி. உதயகுமாரின் பேச்சுக்கு எதிர்ப்பு: தூத்துக்குடி போலீசில் தவெக நிர்வாகி புகார்

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் நடந்த மாவட்ட ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், ஜெயலலிதா பேரவை மாநில செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசுகையில், "அ.தி.மு.கவை நேற்று பிறந்த டவுசர் பையன் விஜய் அபகரிக்க, அழிக்க நினைக்கிறான். அ.தி.மு.க.வை யாரேனும் அழிக்க நினைத்தால், அவர்களின் வம்சமே நாசமாக போகும். மேலும் காவிரி தண்ணீரை பற்றி பேசினால், காவிரியாவது, தண்ணீராவது, எங்க அண்ணி திரிஷா பற்றி யார் பேசியது? என்று அக்கட்சியினர் கேட்கிறார்கள்" என்றார்.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத்திடம், த.வெ.க. புறநகர் மாவட்ட பொருளாளர் அருண்குமார் புகார் மனு அளித்தார். அதில், "கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழ்நாடு முதல்-அமைச்சர் குறித்து தரக்குறைவாகவும், ஒருமையிலும் பேசி உள்ளார்.

மேலும் பெண்கள் குறித்தும் அவதூறு பரப்பி வருகிறார். இதுபோன்று எதிர்காலத்தில் பொதுவெளியில் எந்தவொரு அவதூறு கருத்துகளையும், தனிநபர் விமர்சனங்களையும் தெரிவிக்காத வகையில் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.