ஆறு மாதத்தில் 24 % லாபம் : SIF வளர்ச்சியின் ரகசியம் : முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியது என்ன ? முழு விவரம்
பங்குசந்தையில் SIF எனப்படும் Specialised Investment Funds பல முதலீட்டாளர்களின் விருப்பமான தேர்வாக இருக்கின்றது. ஆகஸ்ட் மாதத்தை பொறுத்தவரை SIF மிகப்பெரிய லாபத்தை ஈட்டி தந்துள்ளது. பங்குசந்தையில் இருக்கும் 30 SIF களில் 26 SIF சிறப்பான லாபத்தை தந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் SIF பங்குகள் 24 % வரை ரிட்டன் தந்துள்ளது.SIF விளக்கம்நீங்கள் பங்குசந்தையில் நேரடியாக பணத்தை முதலீடு செய்வதற்கு பதில் அனுபவம் வாய்ந்த ஃபண்ட் மேனேஜர்களிடம் பணத்தை கொடுத்து சிறந்த பங்குகளில் முதலீடு செய்ய சொல்லும் முறைக்கு பெயர் தான் SIF. இதில் ஃபண்ட் மேனேஜர் முதல் 100 நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்யாமல் 100 முதல் 500 வரை இருக்கும் மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளில் முதலீடு செய்வார். பெரிய நிறுவனங்களை விட வளர்ந்து வரும் நிறுவனங்கள் விரைவாக வளர்ச்சியடைவதால் SIF யில் லாபம் அதிகமாக உள்ளதுலாபத்திற்கான காரணம்SIF கடந்த ஆறு மாதங்களில் அதிக லாபத்தை ஈட்டியதற்கான முக்கிய காரணங்களை இங்கு பார்க்கலாம்நுகர்வோர் பொருட்கள், ஆட்டோ உதிரிபாகங்கள், உற்பத்தி துறை சார்ந்த மிட் கேப் பங்குகளில் அதிகளவில் முதலீடு செய்து வருவது லாபத்திற்கான ஒரு காரணமாக பார்க்கப்படுகின்றதுசந்தையின் போக்கிற்கு ஏற்ப பண இருப்பை மாற்றி அமைத்துக்கொள்வதற்கு SIF ஃபண்டுகளுக்கு சுதந்திரம் உண்டுஒட்டுமொத்த மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பிரிவில் நல்ல வளர்ச்சி மற்றும் லாபம் இருப்பதன் காரணமாக தான் கடந்த ஆறு மாதங்களாக SIF நல்ல லாபத்தை ஈட்டி வருகின்றது. குறிப்பிட்ட சில பிரிவுகளில் மட்டும் லாபம் பார்க்காமல் ஒட்டுமொத்த பிரிவுகளிலும் லாபம் பார்த்து வருகின்றது SIFலாபத்தில் இருக்கும் ஆபத்துகள்சந்தை வீழ்ச்சியின் போது பெரிய நிறுவனங்களை விட இரு மடங்கு மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் இருமடங்கு வேகமாக சரியும்.அந்த சமயத்தில் நஷ்டம் அதிகமாக இருப்ப வாய்ப்புகள் உள்ளதுஅடிக்கடி பங்குகள் மாற்றப்படுவதால் STCG வரி மற்றும் எக்ஸிட் லோட் தாக்கம் இருக்கும்முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவில் 20 % மேல் இதுபோன்ற அதிக அபாயமுள்ள SIF பங்குகளில் முதலீடு செய்ய வேண்டாம்கடந்த கால ரிட்டனை மட்டும் பார்த்து முதலீடு செய்ய வேண்டாம்மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை முதலீடு செய்து காத்திருங்கள்.குறுகிய காலத்தில் பணத்தை எடுத்தால் நஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு