📅 Friday, 18 September 2026 IST | புரட்டாசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 18, 2026 03:34 PM

ஆவின் நெய் எங்கே? வேறு வழியின்றி கூடுதல் விலைக்கு கர்நாடக அரசின் நெய் வாங்கும்

ஆவின் நெய் எங்கே? வேறு வழியின்றி கூடுதல் விலைக்கு கர்நாடக அரசின் நெய் வாங்கும்

ஆவின் நெய் எங்கே? வேறு வழியின்றி கூடுதல் விலைக்கு கர்நாடக அரசின் நெய் வாங்கும் மக்கள்!

சேலத்தில் கர்நாடக அரசின் நந்தினி நெய்யை விநியோகிக்கும் விற்பனையாளர்கள்.

சேலத்தில் ஆவின் நெய்க்கு தட்டுப்பாடு இருப்பதால் கர்நாடக அரசின் நந்தினி நெய்யை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

சேலத்தில் கடந்த ஒரு மாதமாகவே ஆவின் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். தற்போது இது தொடர்பாக ஆவின் கடைகளில் கர்நாடகா நெய் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சேலம் கோரிமேடு பகுதியில் உள்ள ஆவின் கடைகளுக்கு சென்று நேரடியாக கள ஆய்வு செய்தபோது தமிழக ஆராய்ச்சி ஆவின் நிறுவனத்தால் விநியோகிக்கப்படும் நெய் விற்பதில்லை என்பது நிரூபனமாகியுள்ளது.

ஆவின் பால் பொருட்களும் ஒரு நாள் ஒன்றுக்கு 100- 200 லிட்டர் வரை தட்டுப்பாடாகவே கொடுப்பதாகவும் தெரிவித்தனர். குறிப்பாக கர்நாடகா மாநிலத்தின் நந்தினி நெய் கர்நாடக மாநில அரசின் கூட்டுறவு பால் பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனம்.

தமிழக அரசியல் ஆவின் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் நெய்யை விற்பனைக்கு தராமல் தற்போது கர்நாடகா நெய்யில் தங்களுக்கு விற்பனை செய்வதற்கு கொடுப்பதாகவும் குறிப்பாக கடந்த ஒரு மாதமாக ஆவின் நெய் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த ஆவின் மொத்த விநியோகிப்பாளர் கர்நாடகா அரசின் பால் உற்பத்தி தயாரிக்க கூடிய இந்த நந்தினி நெய் விற்க வேண்டும் என வழங்கி வருவதாகவும் ஆவின் விற்பனை மையத்தில் பணியாற்றும் பெண் தெரிவித்தார்.

ஆவின் நிறுவனத்திற்கு பால் வரத்தை குறைவாக இருப்பதன் காரணமாக தற்போது ஆவின் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் வெண்ணை நெய் மற்றும் பால் பொருட்களின் வரத்து இல்லாததால் ஆவின் மொத்த விநியோகிப்பாளர் தற்போது கர்நாடகா அரசின் கூட்டுறவுத் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் நந்தினி நிறுவனத்தால் தயாரிக்கப்படும் நெய் உள்ளிட்ட பொருட்களை மட்டுமே வாங்கி தமிழகத்தில் உள்ள ஆவின் பால் மையங்களில் வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

தமிழக அரசு பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ஆவின் நிறுவனத்திற்கு முறையாக பால், வெண்ணை, நெய் உள்ளிட்ட பொருட்களை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி