📅 Tuesday, 11 August 2026 IST | ஆடி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 11, 2026 06:03 AM

ஆவின் பால் தட்டுப்பாடு தவெக அரசுக்கு அன்புமணி கண்டனம்

ஆவின் பால் தட்டுப்பாடு தவெக அரசுக்கு அன்புமணி கண்டனம்

ஆவின் பால் தட்டுப்பாடு தவெக அரசுக்கு அன்புமணி கண்டனம்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஆவின் பாலுக்கு கடந்த சில நாட்களாக கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஏழைகள் மற்றும் குழந்தைகளுக்கு வரப்பிரசாதமாக விளங்கும் ஆவின் பால் அனைத்து மக்களுக்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அரசு தவறியிருப்பது கவலையளிக்கிறது. ஆவின் பாலுடன் ஒப்பிடும் போது தனியார் நிறுவனங்களின் பால் விலை லிட்டருக்கு ரூ.16 முதல் 24 வரை அதிகம். ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் ஏழைகள் மாதத்திற்கு குறைந்தது ரூ.750 வரை கூடுதலாக செலவு செய்ய வேண்டும். இது அவர்களுக்கு பெரும் சுமை.

அதுகுறித்து ஆவின் நிறுவனம் எந்த கவலையும் பட்டதாக தெரியவில்லை. கோடைகாலம் என்பதால் பால் உற்பத்தி குறைந்திருப்பது தான் இந்த தட்டுப்பாட்டுக்கு காரணம் என்று கூறி இந்த விவகாரத்தை மிகவும் எளிதாக கடந்து செல்ல ஆவின் நிறுவனம் முயல்கிறது. ஆவின் பால் கொள்முதல் வீழ்ச்சி அடைந்திருப்பதற்கான உண்மையான காரணத்தை அறிந்து கொண்டு உடனடியாக அரசு சரி செய்ய வேண்டும். ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு குறைந்தது ரூ.10 உயர்த்தி, கொள்முதலை அதிகரிக்க வேண்டும். அதன் மூலம் ஆவின் பால் மாநிலம் முழுவதும் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.