📅 Saturday, 12 September 2026 IST | ஆவணி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports July 29, 2026 06:33 PM

ஐபிஎல் 2026: ஆர்சிபியின் பிராண்ட் மதிப்பு உயர்வு.. மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே

ஐபிஎல் 2026: ஆர்சிபியின் பிராண்ட் மதிப்பு உயர்வு..  மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே

ஐபிஎல் 2026: ஆர்சிபியின் பிராண்ட் மதிப்பு உயர்வு.. மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே-க்கு அடுத்தடுத்து இடம்

மும்பை: ஐபிஎல் தொடரின் மிகவும் மதிப்புமிக்க அணியாக ஆர்சிபி அணி உருவெடுத்துள்ளது. இதன் மூலம், பிராண்ட் மதிப்பில் 300 மில்லியன் அமெரிக்க டாலர் என்ற எல்லையைத் தாண்டிய வரலாற்றின் முதல் கிரிக்கெட் அணியாக உருவெடுத்துள்ளது.

சர்வதேச முதலீட்டு வங்கியான ஹூலிஹான் லோகியின் 2026 ஐபிஎல் பிராண்ட் மதிப்பு ஆய்வின்படி, ஆர்சிபி அணி சுமார் ரூ. 2,600 கோடி பிராண்ட் மதிப்புடன் தனது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இது 2025 ஆம் ஆண்டில் இருந்த 269 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இருந்து 16% வளர்ச்சியாகும்.

ஆர்சிபி அணி தொடர்ந்து 2 முறையை கோப்பை வென்று, ரசிகர்களுடன் கொண்டுள்ள இணையற்ற ஈடுபாடு மற்றும் டிஜிட்டல் பிராண்ட் ஆகியவற்றின் தாக்கமே அணியின் இந்த மிகப்பெரிய மதிப்பு உயர்வை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

பிளாக்ஸ்டோன் (Blackstone), போல்ட் வென்ச்சர்ஸ் (Bolt Ventures), ஆதித்யா பிர்லா குழுமம் (Aditya Birla Group) மற்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு கூட்டமைப்பு, ஆர்சிபி அணியை சுமார் 1.78 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் வாங்கியது. இது ஐபிஎல் வரலாற்றிலேயே மிக அதிக தொகைக்கு விற்கப்பட்டதாகும்.

"நாங்கள் ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளை வாங்குவதற்கான செயல்முறைகளிலும் தீவிரமாக ஈடுபட்டோம். இரண்டுமே சிறந்த சொத்துகள்தான். இருப்பினும், ஒட்டுமொத்த லீக்கிலேயே, ஆர்சிபி அணியின் ரசிகர்களின் தீவிரமும், அவர்கள் கொண்டுள்ள பிணைப்பும் இணையற்றவை. இதுவே இதனை ஒரு சிறப்பான வாய்ப்பாக மாற்றியது," என்று ஆர்சிபி உரிமையாளரான சத்யன் கஜ்வானி தெரிவித்தார்.

ஒட்டுமொத்த லீக்கின் சாதனை வளர்ச்சிக்கு மத்தியில் ஆர்சிபியின் இந்த பிரம்மாண்ட வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஐபிஎல்லின் ஒட்டுமொத்த வணிக மதிப்பு ஆண்டுக்கு ஆண்டு 11.4% வளர்ச்சியடைந்து 20.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது. அதே நேரத்தில், அதன் தனித்துவமான பிராண்ட் மதிப்பு 10.3% உயர்ந்து 4.3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது.

பிராண்ட் மதிப்பு தரவரிசையில் ஆர்சிபிக்கு அடுத்தபடியாக மும்பை இந்தியன்ஸ் அணி 264 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் 7.9% உயர்வுடன் இரண்டாவது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 244 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் 3.8% உயர்வுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.