📅 Tuesday, 18 August 2026 IST | ஆவணி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 17, 2026 07:01 PM

அகில இந்திய காவல் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற காவலர்களுக்கு தமிழக டிஜிபி பாராட்டு

அகில இந்திய காவல் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற காவலர்களுக்கு தமிழக டிஜிபி பாராட்டு

அகில இந்திய காவல் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற காவலர்களுக்கு தமிழக டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

2026-ம் ஆண்டிற்கான 11-வது அகில இந்திய காவல் ஜூடோ குழு போட்டிகள் (ஜூடோ, டேக்வாண்டோ, வூஷு, பென்காக் சிலாட் & கராத்தே), கடந்த மாதம் 23.07.2026 முதல் 30.07.2026 வரை தெலுங்கானா மாநிலம் கச்சிபௌலியில் நடைபெற்றது. இப்போட்டிகளில் தமிழக காவல்துறை சார்பில் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் ஆக மொத்தம் 67 நபர்கள் இந்த 5 பிரிவுகளிலும் கலந்து கொண்டனர். பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டிகளில் 1-வெள்ளி மற்றும் 12-வெண்கல பதக்கங்கள் உட்பட மொத்தம் 13 பதக்கங்களை பெற்று தமிழ்நாட்டிற்கும், தமிழக காவல்துறைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

மேற்கண்ட போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/ படைத்தலைவர் மகேஷ் குமார் அகர்வால் (இன்று 17.08.2026) நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.