📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics May 30, 2026 01:00 PM

அரசியலில் திடீர் பரபரப்பு :ஆளுநர் அர்லேகருடன் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எம்.பி. தனபால் திடீர் சந்திப்பு

அரசியலில் திடீர் பரபரப்பு :ஆளுநர் அர்லேகருடன் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எம்.பி. தனபால் திடீர் சந்திப்பு

ஆளுநர் அர்லேகருடன் அதிமுக எம்.எல்.ஏ. அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எம்.பி. தனபால் சந்திப்பு நடைபெற்றது. குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி ஆளுநரிடம் முறையிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தவெக கட்சி சார்பில் அதிமுக எம்எல்ஏக்களை வசியம் செய்து குதிரை பேரம் மூலம் இழுக்க முயற்சித்ததாக ஆளுநரிடம் அதிமுகவின் இபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எம்.பி. தனபால் ஆகியோர் ஆளுநரை சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர். இந்த சந்திப்பு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்தது.

அதிமுகவில் ஏற்பட்ட பிளவு களையப்பட்ட நிலையில் அதிமுக நிர்வாகிகள் இருவரும் ஆளுநரை சந்தித்துள்ளனர். அதிமுகவில் இருந்து 4 சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக ராஜினாமா செய்தார்கள். அந்த நான்கு பேரும் ராஜினாமா செய்ததன் தொடர்பாக பண பரிமாற்றம் நடைபெற்றதாக நேற்றைய முன் தினம் தனபால் அவர்கள் தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். ஜனநாயகத்தை காக்க மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், அமலாக்கத்துறை இதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தனபால் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வகையில் ஆளுநரிடம் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகவுக்கு ஆதரவாக மாற்றி வாக்களித்ததன் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி சார்பில் ஒரு மனுவும் கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது தவெக நடத்தும் குதிரை பேரத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இபிஎஸ் அளித்த மனுவை ஆளுநரிடம் அளித்ததாக கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஒரு செய்தியாளர் சந்திப்பு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்னும் சற்று நேரத்தில் நடக்கும் பொழுது எதற்காக ஆளுநரை சந்தித்தோம் என்பதை பற்றிய விரிவான தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.