அரசு பணி ரத்து: சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு?
சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களுக்கு, கருணை அடிப்படையில், பணி வழங்கியதை ரத்து செய்ததை எதிர்த்து, தமிழக அரசு மேல் முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
கரூரில், 2025 செப்டம்பரில் நடந்த, த.வெ.க., தேர்தல் பிர சார நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர். த.வெ.க., அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், கூட்ட நெரிசலில் பலியான 36 பேரின் குடும்பங்களுக்கு, கருணை அடிப்படையில், கடந்த 10ம் தேதி அரசு பணி வழங்கப்பட்டது. கரூர் சென்ற முதல்வர் விஜய், அரசாணைகளை வழங்கினார்.
இதனை எதிர்த்து, நாம் தமிழர் கட்சி நிர்வாகி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், அரசு பணி வழங்கியதை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக, சட்ட வல்லுநர்களுடன், முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.