அரசு ஊழியர்களுக்கு குட்
மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட நாள் ஏக்கத்திற்கும், எதிர்பார்ப்பிற்கும் வடிகால் அமைக்கும் விதமாக, 8-வது மத்திய ஊதியக் குழு தனது அதிரடி நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு மைல் கல்லாக, வரும் செப்டம்பர் 9ம் தேதி புதுச்சேரி மண்ணிற்கு நேரில் வருகை தரவுள்ளது ஊதியக் குழு.
மத்திய அரசு நிறுவனங்கள், துறை சார் அமைப்புகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் தங்களது கோரிக்கைகளை நேரடியாகக் குழுவின் முன் வைக்க இது ஒரு பொன்னான வாய்ப்பு. இந்தக் குழுவுடன் நேரில் விவாதிக்க விரும்பும் சங்கங்களும், அமைப்புகளும், ஆகஸ்ட் 18ம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ தங்களது சந்திப்புக்கான கோரிக்கையை ஆன்லைன் வாயிலாகப் பதிவு செய்ய வேண்டும்.
அதற்காக, https://nicforms.nic.in/enRhYmxNmE2MWUyZjk4YjU4Nzlw MjYwNzIzMTMTM0 என்ற அதிகாரப்பூர்வ இணைப்பு வழியாக விண்ணப்பிக்கலாம். இந்த கமிஷன் இணையதளத்தில் தங்களது குறிப்பாணையைச் சமர்ப்பித்தவுடன் கிடைக்கும் யுனிக் மெமோ ஐ.டி., இருந்தால் மட்டுமே அப்பாயிண்ட்மென்ட்டுக்கு விண்ணப்பிக்க முடியும் என்பதை ஊழியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இடம் எப்போது? மீட்டிங் நடக்கும் துல்லியமான இடமும் நேர அட்டவணையும் பின்னர் தனித்தனியாக வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரிக்கு மட்டும்... மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குப் பிறகு அந்தந்தக் காலக்கட்டங்களில் ஊதியக் குழு தனித்தனியே சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் என்பதால், தற்போதைய இந்த வாய்ப்பை புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த அரசு ஊழியர்களுக்கும் மட்டுமே. இதனை அரசு ஊழியர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று எட்டாவது ஊதிய கமிஷன் பரிந்துரை குழு அறிவித்துள்ளது.
செப்டம்பர் 9-ல் களமிறங்கும் ஊதியக் குழுவைச் சந்தித்து தங்களது கோரிக்கைகளை வலுவாக முன்வைக்கத் தயாராகுங்கள் புதுச்சேரி ஊழியர்களே..