அட்டாக் செய்ய வந்த திமுக... திருப்பி அடித்த தவெக.. ரகுபதியால் கலவர பூமியான
அட்டாக் செய்ய வந்த திமுக... திருப்பி அடித்த தவெக.. ரகுபதியால் கலவர பூமியான சட்டப்பேரவை!
தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் மு.க.ஸ்டாலின் இருந்தார். ஆனால் ஓட்டுப் போடும் நேரத்தில் சிறு குழந்தைகள் குறுக்கே புகுந்து விட்டார்கள் என சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் ரகுபதி வேதனை தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழக வெற்றிக் கழகம் - திமுக உறுப்பினர்களிடையே காரசார விவாதம் நடைபெற்றது. அதில் நடைபெற்ற சுவாரஸ்ய சம்பவங்கள் பற்றிக் காணலாம். அப்போது முன்னாள் அமைச்சர் ரகுபதி பேசிய கருத்துகளும், அதற்கு ஆளும் கட்சியின் அமைச்சர்கள் பதிலடி கொடுத்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி பேசியபோது பத்திரிகை செய்தி ஒன்றை மேற்கோள் காட்டி கேள்வி எழுப்பினார். இதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். உடனடியாக குறுக்கிட்ட சபாநாயகர் பத்திரிக்கை, சமூக ஊடக தகவல்களை வைத்து விவாதிக்க வேண்டும் என்றால் இனி என்னிடம் முன் அனுமதி பெற வேண்டும் என அறிவித்தார். இதனையடுத்து பேசிய அமைச்சர் மரிய வில்சன், இந்த அவையின் மூத்த அனுபவம் கொண்டு உறுப்பினரான நீங்கள் பத்திரிக்கை, சோசியல் மீடியாவில் வெளியான செய்தியை வைத்து பேசுவது சரியல்ல என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த ரகுபதி, சமூக வலைத்தளத்தில் பொய்யாக போட்டு தான் திமுக இன்றைக்கு எதிர்க்கட்சியாக உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் ஆளும் கட்சியாக உள்ளது என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த செங்கோட்டையன், சமூக வலைத்தளம் எல்லாம் கையில் இருப்பதால் தான் நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கிறது என பதிலடி கொடுத்தார்.
தொடர்ந்து பேசிய ரகுபதி, “நீர்வளத்துறையில் 3% கமிஷன் கொடுத்தால் தான் பில் கொடுப்பதாக சொல்கிறார்கள். பொதுப்பணித்துறையில் 5% கேட்கிறார்கள் என அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டினார். இதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஆனந்த், “அதெல்லாம் பழைய காலம். ஆதாரத்துடன் பேச வேண்டும். ஒத்த ரூபாய் நாங்கள் வாங்கினால் நாளைக்கு எங்க முதலமைச்சர் இந்த இடத்தில் எங்களை உட்கார வைக்க மாட்டார். ஆதாரம் இருந்தால் மட்டும் பேசுங்கள். வாயால் பேசியது எல்லாம் உங்க காலத்தில் எல்லாம் சரியாக இருக்கலாம். இப்போது நிரூபிக்க வேண்டும்” என தெரிவித்தார்.
அப்போது லஞ்சம் பணம் பற்றி விஜய் சொன்ன டயலாக்கை அவர் பேச தொடங்க கோரஸாக எதிர் வரிசையில் அமர்ந்திருந்த ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அந்த வசனத்தை பேசிக் காட்டினார்கள்.
திமுக அரசு பல்வேறு வகையான திட்டங்களை கொண்டு வந்தது. அதன்மூலம் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் மு.க.ஸ்டாலின் இருந்தார். ஆனால் ஓட்டுப் போடும் நேரத்தில் சிறு குழந்தைகள் குறுக்கே புகுந்து விட்டார்கள். ஆனால் நீங்கள் அறிவித்துள்ள அண்ணன் சீர் திட்டம், சூப்பர் சைக்கிள் என எந்த திட்டத்தையும் நிதி நிலைமையை பொறுத்து பார்த்தால் நிறைவேற்ற முடியாது என தெரிவித்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மரிய வில்சன், தமிழ்நாட்டிலும் இருக்கும் ஒவ்வொரு மக்களின் தலையிலும் 1.28 லட்சம் கடனை விட்டுச் சென்ற இடத்திலும் உங்கள் தலைவர் ஸ்டாலினை தேடலாம். இதனை நான் சொல்லவில்லை. முந்தைய திமுக ஆட்சி நிர்வாக தோல்வியால் தான் இந்த பிரச்னை நடந்தது. நாங்கள் ஒன்றும் 50 ஆண்டுகள் ஆட்சியில் இல்லை என பதிலளித்தார்.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி