📅 Sunday, 13 September 2026 IST | ஆவணி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 13, 2026 04:33 AM

Box Office: விஜய்க்கே டஃப் கொடுத்த கார்த்தி.. இப்போ சூரியிடம் சறுக்கிட்டாரே.. சர்தார் 2 டே 2 வசூல்!

Box Office: விஜய்க்கே டஃப் கொடுத்த கார்த்தி.. இப்போ சூரியிடம் சறுக்கிட்டாரே.. சர்தார் 2 டே 2 வசூல்!

சென்னை: விஜய்யின் பிகில் திரைப்படம் வரும் போது கார்த்தி நடித்த கைதி திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால், தற்போது டேபிள் மொத்தமும் மாறிவிட்டது. கார்த்தியின் சர்தார் 2 வெளியாகி 2வது நாளில் அதன் வசூல் அப்படியே சரிந்து விட்டது. மேலும், காட்சிகளின் எண்ணிக்கைகளும் குறைந்து வருகின்றன.

ஆனால், மதிமாறன் இயக்கத்தில் சூரி நடித்துள்ள மண்டாடி திரைப்படத்துக்கு கூடுதலாக 500 ஸ்க்ரீன்கள் கிடைத்தது மட்டுமின்றி 2வது நாள் அதிக வசூலை அள்ளி மாஸ் காட்டி வருகிறது.

எப்போதுமே ஒரு படத்தின் வெற்றிக்கு ஹீரோக்களை விட இயக்குநர்களே முக்கிய காரணமாக உள்ளார்கள் என்பதை மீண்டும் இந்த வார சம்பவமும் ஆணித்தரமாக நிரூபித்துள்ளது.

முதலிடத்தில் சூரி: இந்த வாரம் பாக்ஸ் ஆபீஸ் மோதலில் 120 கோடி பட்ஜெட்டில் உருவான கார்த்தியின் சர்தார் 2 படத்தை பின்னுக்குத் தள்ளி சூரி முந்தி முதலிடத்தை பிடித்து விட்டதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. கார்த்தியின் சர்தார் 2 படத்துக்கு முதல் நாள் இருந்த எதிர்பார்ப்பு அதன் பின்னர் வெளியான விமர்சனங்கள் காரண்மாக அப்படியே 2வது நாளில் பாதியாக குறைந்து விட்டது. மண்டாடி திரைப்படம் 2 நாட்களில் 15.80 கோடி வசூலை கடந்துள்ளது. கவின், நயன்தாரா நடிப்பில் வெளியான ஹாய் திரைப்படமே இதுவரை 16 நாட்களில் 14.87 கோடி தான் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சறுக்கிய சர்தார் 2 வசூல்: பி.எஸ். மித்ரன் பேட்டிகள் மூலம் படத்தின் ஓபனிங் வசூலுக்கு முடிந்தவரை ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்கும் வேலையை பார்த்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், படம் ரசிகர்கள் பார்வைக்கு வந்த பிறகு அவர்கள் கொடுத்த தீர்ப்பு படத்திற்கு சாதகமாக இல்லை. சர்தார் 2 திரைப்படம் முதல் நாளில் 4.5 கோடி இந்தியாவிலும் உலகளவில் 6 கோடி ரூபாய் வசூலையும் ஈட்டிய நிலையில், நேற்று செப்டம்பர் 11ம் தேதி கார்த்தியின் சர்தார் 2 திரைப்படம் 45 சதவீதம் டிராப் ஆகிவிட்டதாம். 2வது நாளில் வெறும் 2.45 கோடி வசூலை இந்தியளவில் சர்தார் 2 எடுத்துள்ளதாக கூறுகின்றனர். ஒட்டுமொத்தமாக 2 நாட்களில் உலகளவில் சர்தார் 2 திரைப்படம் 10 கோடி வசூலை கடந்துள்ளது. மண்டாடி திரைப்படம் 16 கோடி வசூலை நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

3 நாள் விடுமுறை: வியாழன், வெள்ளி பாக்ஸ் ஆபீஸ் கேமை விட சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி விடுமுறை கேம் தான் முக்கியம் என்கின்றனர். இந்த 3 நாட்களில் மண்டாடி, சர்தார் 2 படங்களில் எந்த படம் அதிக வசூலை ஈட்டுகிறது என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம். சூரியின் மண்டாடி பட்ஜெட்டும் சுமார் 80 கோடி என்கிற நிலையில், 2 படங்களும் அதிகபட்சமாக 100 கோடி வரை வசூல் ஈட்டினால் தான் லாபம் பெற வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.