📅 Tuesday, 11 August 2026 IST | ஆடி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 11, 2026 10:04 PM

சென்னை பல்லாவரத்தில் உள்ள பிரபல பிரியாணி கடையில் லிப்ட் அறுந்து விபத்து: மூதாட்டி உயிரிழப்பு!

சென்னை பல்லாவரத்தில் உள்ள பிரபல பிரியாணி கடையில் லிப்ட் அறுந்து விபத்து: மூதாட்டி உயிரிழப்பு!

சென்னை பல்லாவரத்தில் உள்ள பிரபல பிரியாணி கடையில் லிப்ட் அறுந்து விபத்து: மூதாட்டி உயிரிழப்பு!

சென்னை: சென்னை பல்லாவரத்தில் உள்ள பிரபல பிரியாணி கடையில் இன்று காலை லிப்ட் அறுந்து விழுந்த விபத்தில் மூதாட்டி உயிரிழந்தார். 3 ஆண்டுகளாக பிரியாணி கடையில் பணிபுரிந்து வந்த மும்தாஜ்(70) என்ற மூதாட்டி லிப்ட் அறுந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

லிப்ட் 3-வது தளத்திற்கு மேலே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அதன் இரும்பு கம்பி திடீரென அறுந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் அந்த கடையில் பணிபுரிந்து வந்த மூதாட்டி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அதிவேகமாகத் தரையில் மோதிய விபத்தில், மூதாட்டி மும்தாஜ்(70) உயிரிழந்துள்ளார். இதனையடுத்து பல்லாவரம் போலீசார் மூதாட்டியின் பிரேதத்தை கைப்பற்றி தாம்பரம் அரசு மருத்துவனைக்கு பிரேதப் பரிசோதனைகாக அனுப்பிவைத்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

முதற்கட்ட விசாரணையில் அந்த பிரியாணி கடையில் லிபிட்டிற்கு முறையான பராமரிப்பு இல்லாததால் விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது. மேலும் அந்த கடையின் நிர்வாகிகளிடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.