📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 30, 2026 09:01 PM

சென்னையில் யுஜிசி நெட் தேர்வுக்கு இலவச பயிற்சி

சென்னையில் யுஜிசி நெட் தேர்வுக்கு இலவச பயிற்சி

சென்னை: சென்னையில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் யுஜிசி நெட் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட இருப்பதாக தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி இயக்குநர் ந. அருள் வெளியிட்ட செய்திக் குறிப்பு: யுஜிசி நெட் தேர்வு வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. நெட் தேர்வுக்கு சென்னை தரமணியில் உள்ள, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதுகலை மாணவர்கள் பயன்பெறும் வகையில் நேரடி பயிற்சி வகுப்புகள் அக்டோபர் 3-ம் முதல் நடத்தப்பட உள்ளன.

இரண்டாம் தாளுக்கான பயிற்சி வகுப்பு (தமிழ் முதன்மை பாடம்) வாரம்தோறும் சனிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், முதல் தாளுக்கான பயிற்சி வகுப்பு (General Paper on Teaching and Research Aptitude) வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும் நடைபெறும்.

இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்துக்கொள்ள விரும்பும் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் 90808 65906 என்ற எண்ணில் பதிவுசெய்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.