📅 Saturday, 01 August 2026 IST | ஆடி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 31, 2026 12:33 AM

செந்தில் பாலாஜி குறித்து போலீஸ் விசாரணை

செந்தில் பாலாஜி குறித்து போலீஸ் விசாரணை

செந்தில் பாலாஜி குறித்து போலீஸ் விசாரணை

திருவல்லிக்கேணி ஸ்டேஷனில் ஆஜரான செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கிடம் போலீசார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர்.

சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க 35 கோடி ரூபாய் சன்மானம் தருவதாக தன்னிடம் சிலர் பேரம் பேசியதாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. இளையராஜா, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி காவல்துறை பதிவு செய்யப்பட்ட வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக காவல்துறை சம்மன் அனுப்பியதையடுத்து, இருவரும் முன் ஜாமின் பெற்று வெளியே வந்தனர்.

தவெக எம்.எல்.ஏ பேர வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி, தினமும் ஆஜராகி வந்த செந்தில்பாலாஜி இன்று திடீரென ஆஜராகவில்லை. திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் அசோக் குமார் கையெழுத்திட ஆஜரானார். செந்தில் பாலாஜி காலை ஆஜராகாத நிலையில் மாலையும் ஆஜராகவில்லை. செந்தில் பாலாஜி எங்கே இருக்கிறார்? என்பது குறித்து அசோக் குமாரிடம் திருவல்லிக்கேணி போலீஸ் விசாரணை நடத்தியது. செந்தில் பாலாஜி தொடர்பான கேள்விக்கு அசோக் குமார் பதிலளிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.