செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
விக்கிரவாண்டி: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் செவிலியர்கள் குரல் முழக்க ஆர்பாட்டத்தில், ஈடுபட்டனர்.
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கம் சார்பில் நேற்று மருத்துவ செவிலியர்கள் சங்க தலைவர் நாகவள்ளி தலைமையில், செயலாளர் ஜெலினா பிரேமாகுமாரி, பொருளாளர் பிரதீப், மாநில செயற்குழு சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், தமிழக அரசு மறு கட்டமைப்பு பெயரில் ஆள் குறைப்பு நடவடிக்கை அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், தொகுப்பு ஊதியத்தில் பணி புரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஸ்டாப் நர்ஸ் பதவியை நர்சிங் ஆபிஸர் என பதவி மாற்றம் செய்ய வேண்டும்; என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த மூன்று அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கடந்த 3,4 மற்றும் 5ம் தேதிகளில் பேட்ச் அணிந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று மருத்துவமனையில், செவிலியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி குரல் முழக்க ஆர்பாட்டம் செய்து நோயாளிகள் பாதிக்காதவாறு பணி செய்தனர். தொடர்ந்து வரும், 8ம் தேதி வரை ஒரு மணி நேரம் குரல் முழக்க ஆர்பாட்டம் செய்து நோயாளிகள் பாதிப்பு இல்லாமல் பணி செய்வதாக தெரிவித்தனர்.