📅 Thursday, 15 October 2026 IST | புரட்டாசி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology October 15, 2026 09:02 PM

செயற்கை நுண்ணறிவு எதிர்ப்பு வர்த்தகம்... பங்குச்சந்தையில் ஏற்றம் கண்ட ஐ.டி. துறை பங்குகள்

செயற்கை நுண்ணறிவு எதிர்ப்பு வர்த்தகம்... பங்குச்சந்தையில் ஏற்றம் கண்ட ஐ.டி. துறை பங்குகள்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப எதிர்ப்பு வர்த்தக போக்கு காரணமாக இந்திய பங்குச்சந்தையில் இன்று ஐடி (IT) நிறுவன பங்குகள் விற்பனை சூடுபிடித்தன.

ஆசியச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டுள்ள சூழலில், உலகளாவிய மற்றும் உள்நாட்டுச் சந்தை மாற்றங்கள் காரணமாக இந்தியப் பங்குச் சந்தையில் காலை முதலே வர்த்தகம் விறுவிறுப்பாக நடைபெற்றது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு எதிர்ப்பு வர்த்தகம் (ரிவர்ஸ் ஏஐ வர்த்தகம்) மற்றும் பாரம்பரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதான கவனம் காரணமாக இந்திய ஐ.டி நிறுவன பங்குகள் விற்பனை விறுவிறுப்படைந்தது.

அடுத்த நிதியாண்டில் பாரம்பரிய தகவல் தொழில்நுட்பச் செலவுகள் குறித்த அக்செஞ்சர் நிறுவனத்தின் வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து வருவதாக சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர். செயற்கை நுண்ணறிவு எதிர்ப்பு வர்த்தகம் என்பது, செயற்கை நுண்ணறிவு பபிள் அல்லது பணமாக்குதல் தொடர்பான கவலைகளுக்கு எதிரான ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக, அதிவேகமாக வளரும், செயற்கை நுண்ணறிவை மையமாகக் கொண்ட வன்பொருள் மற்றும் தொழில்நுட்பப் பங்குகளில் இருந்து மூலதனத்தை விலக்கி, பாரம்பரிய, தொழில்நுட்பம் அல்லாத அல்லது குறைந்த பாதிப்புள்ள துறைகளுக்குள் முதலீட்டை திருப்பிவிடும் ஒரு முதலீட்டு உத்தியாகும்.

இந்த போக்கு இன்று சந்தையில் எதிரொலித்ததால் தரமான தகவல் தொழில்நுட்பப் பங்குகளை வாங்குவதற்கு முதலீட்டாளர்களை தூண்டியது. ஐடி நிறுவன பங்குகள் கணிசமான லாபத்துடன் ஏற்றத்தில் வர்த்தகமாகின. இதன் விளைவாக நிப்டி தகவல் தொழில்நுட்பக் குறியீடு காலை வர்த்தகத்தின்போது 2 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்து ஏற்றத்தைக் கண்டது.

வளர்ந்து வரும் சந்தைகளில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு எதிர்ப்பு வர்த்தகமானது, தென் கொரியா மற்றும் தைவான் போன்ற பிற வளர்ந்து வரும் சந்தைகளுக்குச் சென்ற வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களை (FPIs) மீண்டும் இந்தியப் பங்குச் சந்தைக்கு ஈர்க்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இன்றைய ஆசிய பங்குச் சந்தைகளில் நிலவிய கடும் சரிவுக்கு மத்தியிலும், இந்திய பங்குச் சந்தை ஏற்றம் கண்டதற்கு இது ஒரு மிகச்சிறந்த உதாரணமாகும்.

சென்செக்ஸ் உயர்வு

தேசிய பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தகத்தின் நிறைவில் நிப்டி 374.65 புள்ளிகள் (1.66 சதவீதம்) உயர்ந்து, செப்டம்பர் 25ம் தேதிக்குப் பிறகு இல்லாத அளவாக 22,997.35 புள்ளிகளில் முடிவடைந்தது. சென்செக்ஸ் 1,533.72 புள்ளிகள் (2.11 சதவீதம்) உயர்ந்து, 74,315.61 புள்ளிகளில் நிறைவடைந்தது.