செய்யாறு ஆற்றங்கரையில் வேளாண் பட்ஜெட்டுக்கு திதி கொடுத்து விவசாயிகள் எதிர்ப்பு
செய்யாறு ஆற்றங்கரையில் வேளாண் பட்ஜெட்டுக்கு திதி கொடுத்து விவசாயிகள் எதிர்ப்பு
திருவண்ணாமலை: செய்யாறு ஆற்றங்கரையில் வேளாண் பட்ஜெட்டுக்கு திதி விவசாயிகள் கொடுத்துள்ளனர். ஏமாற்றும் வகையில் வேளாண் பட்ஜெட் இருப்பதாக பட்ஜெட்டுக்கு திதி கொடுத்து விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இன்று ஆடி அமாவாசை என்பதால், செய்யாறு ஆற்றங்கரையில் கட்சி சார்பற்ற விவசாயிகள் 15-க்கும் மேற்பட்டோர் தவெக அரசு கொண்டு வந்த தமிழக வேளாண் பட்ஜெட்டுக்குத் திதி கொடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்குத் தேவையான எந்தவொரு அடிப்படைத் தேவைகளும் பூர்த்தி செய்யப்படவில்லை என்றும், முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிக்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
வறட்சி நிவாரணம் வழங்க முறையான கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இந்த பட்ஜெட் விவசாயிகளுக்குப் பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது என்று அவர்கள் கூறினர். இதனைத் தொடர்ந்து, பட்ஜெட்டுக்குத் திதி கொடுத்து அவர்கள் நடத்திய இந்த நூதனப் போராட்டம் செய்யாறு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.