📅 Thursday, 10 September 2026 IST | ஆவணி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 10, 2026 03:32 PM

சிஎஸ்கே புதிய பயிற்சியாளர்.. தோனி போட்ட 2 அதிரடி நிபந்தனைகள்.. ரேஸில் முன்னிலை வகிக்கும் தமிழக வீரர்

சிஎஸ்கே புதிய பயிற்சியாளர்.. தோனி போட்ட 2 அதிரடி நிபந்தனைகள்.. ரேஸில் முன்னிலை வகிக்கும் தமிழக வீரர்

சிஎஸ்கே புதிய பயிற்சியாளர்.. தோனி போட்ட 2 அதிரடி நிபந்தனைகள்.. ரேஸில் முன்னிலை வகிக்கும் தமிழக வீரர்

சென்னை: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நீண்ட காலம் பணியாற்றிய ஸ்டீபன் பிளெமிங் சமீபத்தில் தனது பதவியில் இருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து சிஎஸ்கே அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், முன்னாள் கேப்டன் தோனி இரண்டு முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளார்.

கடந்த 2023-ல் கோப்பை வென்ற சிஎஸ்கே அணி, அதன் பிறகு தொடர்ச்சியாக 3 சீசன்களாக பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் ஏமாற்றம் அளித்தது. 2026 ஐபிஎல் தொடரிலும் 8-வது இடத்தையே பிடித்தது. இந்த சூழலில், முன்னாள் இந்திய வீரரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான ஹேமங் பதானி புதிய தலைமைப் பயிற்சியாளர் ரேஸில் முன்னணியில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த வாரத்திற்குள் இதுகுறித்த அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்படலாம்.

புதிய பயிற்சியாளர் நியமனம் தொடர்பாக தோனி முன்வைத்துள்ள முதல் நிபந்தனை, சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் குழுவை ஒரு இந்தியரே வழிநடத்த வேண்டும் என்பதாகும். இரண்டாவது நிபந்தனையாக, புதிய பயிற்சியாளர் முழு நேரமும் சிஎஸ்கே அணியின் செயல்பாடுகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்; ஒரே நேரத்தில் பிற வெளிநாட்டு லீக் அணிகளில் பணியாற்றக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு முன்பு பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங், தென்னாப்பிரிக்கா மற்றும் அமெரிக்க லீக் தொடர்களிலும் சூப்பர் கிங்ஸ் அணிகளுக்குப் பயிற்சியாளராகச் செயல்பட்டு வந்தார். அந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, ஐபிஎல் தொடருக்கு மட்டுமே முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என தோனி விரும்புகிறார்.

டெல்லி கேபிடல்ஸ் அணியில் பணியாற்றிய அனுபவம் கொண்ட ஹேமங் பதானி, இங்கிலாந்தின் தி ஹண்ட்ரட் மற்றும் துபாயின் ஐஎல்டி20 தொடர்களிலும் அணிகளை வழிநடத்தி வெற்றி கண்டுள்ளார். தோனி, தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அணி நிர்வாகம் இணைந்து எடுக்கும் இந்த அதிரடி முடிவு, சிஎஸ்கே அணியை மீண்டும் பழைய ஃபார்முக்குக் கொண்டு வருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.