📅 Thursday, 15 October 2026 IST | புரட்டாசி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 15, 2026 03:03 PM

சிங்கப்பூர் ஏர்லைன்சில் புதிய இரவு உடைகள், ஆடம்பர அழகுச் சாதனங்கள்

சிங்கப்பூர் ஏர்லைன்சில் புதிய இரவு உடைகள், ஆடம்பர அழகுச் சாதனங்கள்

நவம்பர் மாதம் முதல் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள், அனைத்து வகுப்புகளிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய ரக வசதிகளை எதிர்பார்க்கலாம்.

இதில் புதிய இரவு ஆடைகள், ஆடம்பரச் சருமப் பராமரிப்புப் பொருள்கள் மற்றும் ‘டாய் ஸ்டோரி’ கருப்பொருளுடனான பொருள்கள் இடம்பெறுகின்றன.

புதன்கிழமையன்று (அக்டோபர் 14) வெளியிட்ட ஊடக அறிக்கையில், இந்தப் புதிய வசதிகள் நவம்பர் மாதம் முதல் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவித்தது.

புதிய இருக்கைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட உணவுப் பட்டியல் உள்ளிட்ட பிற மேம்பாடுகளுடன் இவை வழங்கப்படுகின்றன. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வரலாற்றிலேயே முதன்முறையாக, வர்த்தக வகுப்பில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இலவசமாக இரவு ஆடைகள் வழங்கப்படும்.

கருநீல நிற பாலியஸ்டர்-பருத்திக் கலவையால் தயாரிக்கப்பட்ட இந்த இரவு ஆடை, இரண்டு அளவுகளில் கிடைப்பதுடன், ஒரு ஜோடி சாம்பல் நிறக் காலணிகளுடனும் சேர்த்து வழங்கப்படுகிறது. இந்த மேம்பாட்டின் மூலம், வர்த்தக வகுப்பில் இரவு ஆடை வழங்கும் கத்தார் ஏர்வேஸ், எமிரேட்ஸ் மற்றும் எதிஹாத் ஏர்வேஸ் போன்ற உலகளாவிய முன்னணி விமான நிறுவனங்களின் வரிசையில் சிங்கப்பூர் ஏர்லைன்சும் இணைகிறது.

அதேவேளையில், முதல் மற்றும் சுவீட்ஸ் வகுப்புகளின் வாடிக்கையாளர்களுக்கு 100 விழுக்காடு பருத்தியால் செய்யப்பட்ட அடர் சாம்பல் நிற மேம்படுத்தப்பட்ட இரவு ஆடைகள் நான்கு அளவுகளில் வழங்கப்படும்.

அத்துடன் சொகுசான கோரல் ஃபிலீஸ் செருப்புகளும் உடன் இணைத்து வழங்கப்படும். இந்த இரவு ஆடைகளும் காலணிகளும் ஆறு மணி நேரத்துக்கு மேலாகப் பறக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட இரவு நேர விமானங்களிலும் அனைத்து நெடுந்தொலைவு விமானங்களிலும் வழங்கப்படும்.

உடல் வசதியை மேம்படுத்தும் பொருள்களைத் தவிர, விலை உயர்ந்த சருமப் பராமரிப்பு மற்றும் தனிநபர் பராமரிப்புப் பொருள்களையும் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது