சிங்கப்பூர் ஸ்ரீ ராமர் கோயிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை விழா கோலாகலம்
சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் கோயிலில் 26.9.2026 இல் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை மகோற்சவம் கோலாகலமாக பக்தர்கள் வெள்ளம் பொங்கித் ததும்பி பூரணமாய் பொலிய கோலாகலமாக நடைபெற்றது வைகறையிலேயே ' கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா..... ' சுப்ர பாத இசை இப்பகுதி முழுவதும் பரவி தெய்வீக மணம் கமழச்செய்து புளகாங்கிதம் அடைய வைத்தது. அருகில் உள்ள விமான நிலையத்திலிருந்து விமானங்கள் தாழப் பறந்து வழிபட்டன.
தொடர்ந்து தோமால சேவை, விஷ்ணு சஹஸ்ரநாமம் , திருமஞ்சனம் விஸ்வரூப தரிசனம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீ சீதா லட்சுமண ஹனுமன் சமேத ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி விஸ்வரூப தரிசனம் கண்கொள்ளாக் காட்சியாக நடைபெற பக்தர்கள் கோவிந்தா நாராயணா மதுசூதனா வைகுந்த வாசா என முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது தலைமை அர்ச்சகர் வைகானஸ யஷோபூஷணம் அம்மன்குடி வெ ஸ்ரீ நிவாச பட்டாச்சாரியார் பூலோக ஸ்வர்க்கமாம் திருமலை திருப்பதி தேவஸ்தான முறையில் வழிபாடு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது
மாலையில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி கருட சேவையில் எழுந்தருளி ஆனந்தத் திருத் தாண்டவம் ஆடிய காட்சி மெய் சிலிர்க்க வைத்தது. தலைமை அர்ச்சகர் வைகானஸ யஷோபூஷணம் அம்மன்குடி வெ ஸ்ரீ நிவாச பட்டாச்சாரியார் இதன் தாத்பர்யத்தை விளக்கினார் அருள் பிரசாதம் பெற்ற பக்தர்கள் அறுசுவை அன்னப் பிரசாதமும் பெற்று மகிழ்ந்தனர். ஆலய நிர்வாகம் ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்திருந்தனர்