📅 Sunday, 04 October 2026 IST | புரட்டாசி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 04, 2026 05:03 AM

சிங்கப்பூர் விளையாட்டுத்துறையின் எதிர்காலம்: சாந்தி பெரேராவின் சாதனை

சிங்கப்பூர் விளையாட்டுத்துறையின் எதிர்காலம்: சாந்தி பெரேராவின் சாதனை

சிங்கப்பூர் வீராங்கனை சாந்தி பெரேரா தொடர்ச்சியாக இரண்டு ஆசிய விளையாட்டுகளில் 200மீ ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

அச்சாதனையைப் படைத்த முதல் பெண்மணி என்ற பெருமையும் அவரையே சேரும். உலக வரைபடத்தின் ஒரு சிறு புள்ளியிலிருந்து சென்று அனைத்துலக மேடையில் தடம்பதித்த அவரை நாம் போதுமான அளவு கொண்டாடுகிறோமா என்பது நாம் அனைவரும் வினவவேண்டிய ஒன்று.

சமூக ஊடகங்களில் சிலர் பாராட்டு தெரிவிக்கின்றனர்; மக்கள் கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு அதுபற்றி மகிழ்ச்சியாகப் பேசிக்கொள்கின்றனர்; அரசாங்கம் அவரது சாதனைக்கு $200,000 பரிசளிக்கிறது. ஆனால், இவை மட்டும் போதுமானதா?

பரிசுப் பணத்தில் அவர் 20 விழுக்காட்டை எதிர்கால விளையாட்டு வளர்ச்சிக்காகத் தேசிய விளையாட்டுச் சங்கங்களுக்கு வழங்க வேண்டும். சமூக ஊடகப் பாராட்டுகள் வயிற்றை நிரப்பாது; மக்களின் வாழ்த்துகள் ஓரளவிற்கு வேண்டுமானால் மனத்தைக் குளிரச்செய்யலாம்.

இத்தகைய சூழலைப் பார்க்கும் இளையர் ஒருவர்க்கும் சிங்கப்பூரில் முழு நேர விளையாட்டாளர் ஆக வேண்டுமென்ற எண்ணம் உதிப்பது சற்று கடினமே.

‘ஸ்பெக்ஸ்’ உபகார சம்பளம், வளர்ச்சித் திட்டங்கள், மேம்பட்ட பயிற்சிக் கட்டமைப்புகள் ஆகியவற்றின்வழி அரசாங்கம் இளையர்களை ஊக்குவிக்க முனைந்தாலும், விளையாட்டுத்துறையை முழு நேரப் பணியாகக் கையிலெடுக்கும் இளையர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

பல நேரங்களில் நமது தேசிய விளையாட்டாளர்களும் அணிகளும் போட்டிகளில் எதிர்பார்த்த அளவிற்குச் செயல்படாதபோது அவர்கள் நேரடியாகவும் சமூக ஊடகம் வாயிலாகவும் பெறும் எதிர்மறையான விமர்சனங்கள் பல.

நாட்டிற்காக முழுத்திறனுடன் விளையாடித் தோல்வியுற்ற வலி ஒருபுறம் இருக்க, சக நாட்டு மக்களின் விமர்சனங்கள் மறுபுறம். விளையாட்டாளர்களின் மனநிலை என்னவாக இருக்கும்?

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

எப்போது பள்ளி விளையாட்டுத் திடல்களில் துடிப்புடன் விளையாடும் திறமையான மாணவர்கள் அச்சமின்றி, தயக்கமின்றி, தன்னம்பிக்கையுடன் விளையாட்டை தங்களது பணியாக ஏற்க முற்படுகிறார்களோ அப்போது சிங்கப்பூரில் விளையாட்டுத்துறைக்கு நல்ல எதிர்காலம் உள்ளதென்று கூறலாம்.