Latest News
August 16, 2026 02:31 AM
சிங்கப்பூர்க் கலைஞருக்கு கலைக்கோ மாமணி விருது
கலைஞர்கள் மாமன்றத்தின் சார்பில் மீலாதுன் நபி ஆவணப் படத்தின் இயக்குநர் மில்லத் அகமதின் கலைப்பணியைப் பாராட்டி ' கலைக்கோ மாமணி ' விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர், அமுதா ஆறுமுகம், பேராசிரியர் சா. நசீமா பானு, வசந்தா முருகு பாலிடெக்னிக் கல்லூரி நிறுவன இயக்குநர் இளமுருகு, முஸ்லிம் லீக் செயலாளர் அப்துல் நசீர் ஆகியோர் பாராட்டிப் பேசினர். கலைஞர்கள் மாமன்றத் தலைவர் தங்கவேலு, டாக்டர் ஹாஜா பாரூக், ஹாஜி எஸ். எம். ஆரிப் மரைக்காயர், முனைவர் அசோக் குமார், அமீர் ஜவஹர் கலந்து கொண்டனர்.
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
தொடர்புடைய செய்திகள்
Latest News