📅 Tuesday, 22 September 2026 IST | புரட்டாசி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 22, 2026 06:01 PM

சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதினை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான ராயன் திரைப்படத்திற்காக பெற்றார் தயாரிப்பாளர் காவேரி

சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதினை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான ராயன் திரைப்படத்திற்காக பெற்றார் தயாரிப்பாளர் காவேரி

காந்திநகர்: 72-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் (கெவாடியா) கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்றுவருகிறது. வரலாற்றில் முதன்முறையாக இந்த விழா தலைநகர் டெல்லிக்கு வெளியே நடத்தப்படுகிறது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இவ்விருதுகளை வழங்கிச் சிறப்பித்துவருகிறார்.

இந்த விழாவில் தமிழ் திரைப்படங்களுக்கு 9 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான கேப்டன் மில்லர் தேசிய சமூக மற்றும் சுற்றுச்சூழல் விழுமியங்களை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படம் (Best Feature Film Promoting National, Social and Environmental Values) என்ற உயரிய விருதை வென்றுள்ளது. அத்துடன், இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் தனுஷுக்கு சிறப்பு குறிப்பு (Special Mention - Actor) அங்கீகாரமும் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதினை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான ராயன் திரைப்படத்திற்காக தயாரிப்பாளர் காவேரி கலாநிதி மாறன் பெற்றார்.