📅 Tuesday, 15 September 2026 IST | ஆவணி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News July 25, 2026 08:33 PM

சிறுவனுடன் பாலியல் உறவு; கர்ப்பமான இளம்பெண் மீது போக்சோ நடவடிக்கை

சிறுவனுடன் பாலியல் உறவு; கர்ப்பமான இளம்பெண் மீது போக்சோ நடவடிக்கை

குழித்துறை,

பயிற்சி நிலையத்தில் படித்த போது ஏற்பட்ட பழக்கத்தில் சிறுவனை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு கொண்டு கர்ப்பமான இளம்பெண் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

8 மாத கர்ப்பிணி

கட்டாய பாலியல் உறவு

அதாவது அந்த இளம்பெண் விமான பணியாளர்கள் தொடர்பான ஒரு ஆண்டு பட்டய படிப்புக்காக குழித்துறையில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் சேர்ந்துள்ளார். அதே பாடப்பிரிவில் களியக்காவிளை பகுதியை சேர்ந்த 17 வயதுடைய ஒரு சிறுவனும் சேர்ந்துள்ளார். அந்த பாடப்பிரிவில் இவர்கள் 2 பேர் மட்டுமே படித்துள்ளனர்.

இதனால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நெருக்கம் அதிகரித்தது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தனர். சம்பவத்தன்று இளம்பெண் களியக்காவிளையில் உள்ள சிறுவனின் வீட்டுக்கு பெற்றோர் இல்லாத நேரத்தில் சென்றுள்ளார். அப்போது இளம் பெண்ணின் கட்டாயத்தின் பேரில் இருவரும் பாலியல் உறவு கொண்டுள்ளனர். இதேபோன்ற நிலை பலமுறை தொடர்ந்து நடந்துள்ளது.

போக்சோ வழக்கு