📅 Friday, 18 September 2026 IST | புரட்டாசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 17, 2026 10:33 PM

சந்தீப் கிஷனின் “சிக்மா” திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா அறிவிப்பு

சந்தீப் கிஷனின் “சிக்மா” திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா அறிவிப்பு

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நாளை (18ம் தேதி) சென்னையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் மகன் இயக்குநராக அறிமுகம்

முதல்-அமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதல்முறையாக இயக்குநராக ‘சிக்மா’ படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் நாயகனாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். மேலும் இந்தப் படத்தில் பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், அன்பு தாசன், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

ஜேசன் சஞ்சய் கனடாவில் உள்ள டொராண்டோ பிலிம் ஸ்கூலில் திரைப்படத் தயாரிப்பு டிப்ளமோ படித்துள்ளார். தொடர்ந்து லண்டனில் திரைக்கதை எழுதுவது தொடர்பான பி.ஏ. ஹானர்ஸ் படித்துள்ளார். சில குறும்படங்களை இயக்கியுள்ளார்.

‘சிக்மா’ படத்தில் ஒரு சிறப்பு பாடலில் ஜேசன் சஞ்சய், கேத்தரின் தெரசா நடனமாடி உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ஆக்சன் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

பாடல்கள் வைரல்

‘சிக்மா’ படத்தின் முதல் பாடலான ‘சிக்மா ஸ்டைல்’ வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘அய்யய்யோ அம்மாடி’ வெளியாகி வைரலானது. விவேக் வரிகளில் உருவாகியுள்ள பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார்.

ஓடிடி உரிமை

திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

‘சிக்மா’ படம் வரும் அக்டோபர் 2ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. படம் முன்னதாக ஜூலை31ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின் ஒத்திவைக்கப்பட்டது. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.

Get ready to step into the world of #Sigma ⚡️ as the absolute rage begins with the grand Audio & Trailer Launch on Sep 18 🔥#SigmaInCinemasOct2@official_jsj @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @sundeepkishan @MusicThaman @fariaabdullah2 @saregamasouth pic.twitter.com/5y6dbSfAAe