📅 Sunday, 04 October 2026 IST | புரட்டாசி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News October 04, 2026 05:00 PM

சர்வதேச கலை கண்காட்சியில் தமிழ் சினிமாவுக்கு பெருமை: போஸ்டர் வடிவமைப்பாளர் கோபி பிரசன்னா சிறப்பு விருந்தினராக பங்கேற்பு!

சர்வதேச கலை கண்காட்சியில் தமிழ் சினிமாவுக்கு பெருமை: போஸ்டர் வடிவமைப்பாளர் கோபி பிரசன்னா சிறப்பு விருந்தினராக பங்கேற்பு!

தைவானில் நடைபெறும் 'Mirror of the City' எனும் சர்வதேச ஒளி மற்றும் நிழல் கலைக் கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ் திரைப்பட டிசைனர் கோபி பிரசன்னா பங்கேற்றுள்ளார்.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற சர்வதேச ஒளி மற்றும் நிழல் கலைக் கண்காட்சி (International Light and Shadow Art Exhibition) தைவானில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. உலக அளவிலான புகழ்பெற்ற கலைஞர்கள், ஓவியர்கள் மற்றும் காட்சி அமைப்பாளர்கள் கலந்துகொள்ளும் இந்த சர்வதேசக் கலைத் திருவிழாவில், தமிழ் திரையுலகின் முன்னணி பப்ளிசிட்டி மற்றும் போஸ்டர் வடிவமைப்பாளரான கோபி பிரசன்னா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் புதுமையான பாணியில் திரைப்படங்களின் போஸ்டர்களையும் விளம்பர வடிவமைப்புகளையும் உருவாக்கி உலக அளவில் கவனம் ஈர்த்தவர் கோபி பிரசன்னா. 'ஆரண்ய காண்டம்', 'கத்தி', 'மாஸ்டர்', 'விக்ரம் வேதா', '96', 'லியோ' உள்ளிட்ட எண்ணற்ற வெற்றித் திரைப்படங்களுக்குத் தனித்துவமான மற்றும் நுட்பமான முறையில் போஸ்டர் டிசைன்களை உருவாக்கி, தமிழ் சினிமா விளம்பர அமைப்பிற்குப் புதிய பரிமாணத்தைக் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்காட்சியில் கலந்துகொண்ட கோபி பிரசன்னா, சர்வதேசக் கலைஞர்களின் படைப்புகளையும் காட்சி வடிவங்களையும் பார்வையிட்டார். தொடர்ந்து நிகழ்வில் பேசிய அவர், ஒரு திரைப்படத்தின் கதைக்களத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் முதல் பார்வையான 'போஸ்டர் டிசைனிங்' கலையில் ஒளியும் நிழலும் எவ்வாறு பெரும் பங்கு வகிக்கிறது என்பது குறித்தும், காட்சி அழகியல் சார்ந்த தனது அனுபவங்களையும் சர்வதேசக் கலைஞர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

சர்வதேசத் தளத்தில் நடைபெறும் இத்தகைய மதிப்புமிக்க கலைக் கண்காட்சியில் தமிழ்த் திரையுலகைப் பிரதிநிதித்துவப்படுத்தி கோபி பிரசன்னா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றிருப்பது தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவமாகப் பார்க்கப்படுகிறது. இந்தச் சாதனையைத் தொடர்ந்து திரைத்துறையைச் சேர்ந்த பல முன்னணி இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்குச் சமூக வலைதளங்களில் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.