சுதந்திர தின விழாவில் முதல்வர் வழங்கிய விருதுகள்
சென்னை: சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜயிடம் இருந்து விருது பெற்றவர்கள் விபரம்:
தமிழகத்திற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பங்காற்றியவர் களுக்கு, தமிழக அரசால் இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்த விருதை, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமிக்கு, முதல்வர் விஜய் வழங்கினார். அவருக்கு, 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.
விருதுபெற்ற கிருஷ்ணசாமி கூறுகையில், ''தமிழகம் நாட்டின் முதன்மை மாநிலம் என்ற பெயரை பெற வேண்டும். அதுதான் என்னுடைய ஆசை.
''இந்த ஆட்சியில், ஊழல் குறைந்துள்ளதாக என்னிடம் பேசுவோர் எல்லாம் சொல்கின்றனர்.
''ஒரு பைசா செலவில்லாமல் பணிகள் நடக்கின்றன. இளைஞர்கள் தான் இனி தமிழகத்தை வழி நடத்த வேண்டும்,'' என்றார். இவர், பா.ம.க., சட்டசபை குழு தலைவர் சவுமியாவின் தந்தை என்பது குறிப் பிடத்தக்கது.
தமிழக அரசு சார்பில், அறிவியல் வளர்ச்சி, மனிதநேயம் மற்றும் மாணவர் நலன் போன்றவற்றில் சிறந்து விளங்குவோருக்கு, இவ்விருது சுதந்திர தினத்தன்று வழங்கப் படுகிறது.
அந்த வகையில், மருத்துவ பணிகளில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காகவும், ஏழைகள் மற்றும் ஆதரவற்ற நோயாளிகளுக்கு, இலவச மருத்துவம் வழங்கியதற்காகவும், சர்க்கரை நோயியல் நிபுணர் டாக்டர் மோகனுக்கு, இவ்விருது அறிவிக்கப்பட்டது.
விருதை, டாக்டர் மோகனுக்கு பதிலாக அவரது மகள் அஞ்சனாவிடம் முதல்வர் விஜய் வழங்கினார்.
துணிவு மற்றும் சாகச செயல்களில் ஈடுபடும் பெண்களுக்கு, இந்த விருது வழங்கப்படுகிறது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த நவ்ஷீன் பானு சந்திற்கு, இந்த விருதை முதல்வர் வழங்கினார்.
இவர், 2024 முதல் 2026ம் ஆண்டு வரை தொடர்ந்து மூன்று ஆண்டுகளில், டென்சிங் ஹிலாரி எவரெஸ்ட் மாரத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்து, 'ஹாட்ரிக்' சாதனை படைத்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் குழந்தை பருவத்தில் காணப்படும் வளர்ச்சி குறைவை கண்டறிந்து, ஒருங்கிணைந்த அணுகுமுறையின் வாயிலாக, உரிய நடவடிக்கை மேற்கொண்ட கலெக்டர் லட்சுமி பவ்யாவுக்கு, இந்த விருது அறிவிக்கப்பட்டது.
சென்னையில் நடக்கும் கலெக்டர்கள் மற்றும் எஸ்.பி.,க்கள் மாநாட்டில், இவ்விருது வழங்கப்பட உள்ளது.
நவீன பராமரிப்பு பணிகள், சுற்றுச் சூழலுக்கு உகந்த நடைமுறைகள் மற்றும் அறிவியல் பூர்வமான கழிவு மேலாண்மை வாயிலாக, மெட்ரோ ரயில் நிலையங்கள், ரயில்கள், சுகாதாரமாகவும், சிறப்பாகவும் பராமரிக்கப்படுகின்றன.
இதற்காக, மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பொது மேலாளர் சதீஷ் பிரபுவிற்கு, முதல்வரின் நல்லாளுமை விருது வழங்கப்பட்டது.
எலும்பியல் துறை நிதியை மறுசுழற்சி செய்து, அரசுக்கு எவ்வித கூடுதல் செலவும் இல்லாமல், எடை குறைந்த செயற்கை உறுப்புகளை தயாரித்து, மக்களுக்கு வழங்குவதற்காக, கோவை அரசு மருத்துவக் கல்லுாரி எலும்பியல் மற்றும் விபத்து காய சிகிச்சை துறை மருத்துவர் கீதாஞ்சலிக்கு, முதல்வரின் நல்லாளுமை விருது வழங்கப்பட்டது.
↓மாற்றுத்திறனாளிகளுக்காக அரும்பணியாற்றிய, சிறந்த கலெக்டருக்கான விருது, கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமாருக்கு அறிவிக்கப்பட்டது. கலெக்டர்கள் மாநாட்டில் இந்த விருது வழங்கப்படும்.
↓மாற்றுத்திறனாளிகளுக்கு அரும்பணியாற்றிய மருத்துவருக்கான விருது, சென்னையைச் சேர்ந்த மருத்துவர் திருநாவுக்கரசுக்கு வழங்கப்பட்டது. இவர், சென்னை அரசு புனர்வாழ்வு மையத்தில், இயக்குநர் மற்றும் உடற்செயல் மற்றும் மறுவாழ்வு துறையின் தலை வராக பணிபுரிகிறார்.
கடந்த 34 ஆண்டு களுக்கு மேலாக, உடல் இயக்க குறைபாடு உடைய மாற்றுத் திறனாளிகளுக்கு, சிறப்பான மருத்துவ சேவைகளை வழங்கி வருவதை பாராட்டி, விருது வழங்கப்பட்டது.
↓விழுப்புரம் மாவட்டம், கோணமங்கலம் கிராமத்தில் செயல்பட்டு வரும், 'சிருஷ்டி பவுண்டேஷன்' என்ற தொண்டு நிறுவனத்திற்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறந்த நிறுவனத்திற்கான விருது வழங்கப்பட்டது.
இந்நிறுவனம், 625க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு, கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கியுள்ளது
↓மாற்றுத்திறனாளிகள், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்ற முதியோர் மற்றும் குழந்தைகள் நலனுக் காக பணியாற்றி வரும், திருவண்ணாமலையைச் சேர்ந்த, உலக மக்கள் சேவை மையத்தின் தலைவர் மணிமாறனுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறந்த பணியாளர் விருது வழங்கப்பட்டது
↓திருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வரும், எஸ்.சி.எம்.கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில், 136 இயக்க குறைபாடு உள்ளவர்கள், 73 காது மற்றும் வாய் பேச இயலாதவர்கள், மூன்று பார்வை திறன் குறைபாடுள்ளவர்கள் என, 212 மாற்றுத் திறனாளிகள் பணிபுரிகின்றனர். மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக வேலைவாய்ப்பு அளித்த, சிறந்த தனியார் நிறுவனத்திற்கான விருது, இந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது
↓மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகளவில் வங்கிக் கடன் வழங்கிய, சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியாக மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது
↓சமூகநலம் மற்றும் சிறந்த சேவைக்காக தொண்டாற்றி யவர்களுக்கான விருது பிரிவில், ஈரோடு மாவட்டம், 'அட்சயம் டிரஸ்ட்' தொண்டு நிறுவனத்திற்கு விருது வழங்கப்பட்டது.
மகளிர் நலனுக்கு பணியாற்றிய சிறந்த சமூக சேவகர் விருது, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரைச் சேர்ந்த ராதா என்பவருக்கு வழங்கப்பட்டது.
சென்னை மாநகராட்சியில், சிறந்த மண்டலத்திற்கான முதல் பரிசு திரு.வி.க.,நகர் மண்டலத்திற்கும், இரண்டாம் பரிசு மணலி மண்டலத்திற்கும் வழங்கப்பட்டன. சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசு கோவைக்கும், இரண்டாவது பரிசு தஞ்சாவூருக்கும் வழங்கப்பட்டன. சிறந்த நகராட்சிக்கான முதல் பரிசு போடி நாயக்கனுாருக்கும், இரண்டாம் பரிசு விழுப்புரத்திற்கும் வழங்கப்பட்டன.
சிறந்த பேரூராட்சிக்கான முதல் பரிசு, தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமதுார்; இரண்டாம் பரிசு கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்; மூன்றாம் பரிசு கோவை மாவட்டம் செட்டிபாளையத்திற்கும் வழங்கப்பட்டன. இவ்விருதுகளை முதல்வரிடம் இருந்து, நகராட்சி நிர்வாகத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, நகராட்சி நிர்வாக இயக்குநர் மதுசூதன் ரெட்டி, பேரூராட்சிகளின் இயக்குநர் பிரியங்கா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
முதல்வரின்மாநில இளைஞர்விருதுகள்ஆண்கள் பிரிவில், திருப்பூரைச் சேர்ந்த இம்மானுவேல் நெல்சன்; துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சரவணகுமார்; சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்மல் கதிர்வேல் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.பெண்கள் பிரிவில், மயிலாடுதுறையை சேர்ந்த ராஜேஷ்வரி மகாதேவன், மதுரையைச் சேர்ந்த சிந்தா ஆகியோருக்கு, முதல்வர் விஜய் விருதுகளை வழங்கினார்.விருதுடன் 1 லட்சம் ரூபாய் ரொக்கம், பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டன.