📅 Wednesday, 09 September 2026 IST | ஆவணி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 09, 2026 08:03 AM

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ செப்.11

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ செப்.11

சூர்யா - மமிதா பைஜு நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படம் செப்டம்பர் 11-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இது குறித்து நெட்ஃபிளிக்ஸ் சவுத் அதன் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள தகவலில், ‘விளையாட்டு வீரர், கோடீஸ்வரர், கொடையாளர் மற்றும் பாசமிகு தந்தை சஞ்சய் விஸ்வநாத்தை சந்தியுங்கள்’ என்று தெரிவித்து, படம் வெளியாகும் தேதியையும் அறிவித்துள்ளது.

சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படம் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படத்தில் சூர்யா - மமிதா பைஜுவுடன், ராதிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து இருக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளாக ஆக்‌ஷன் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நடிகர் சூர்யா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஓர் இயல்பான குடும்ப கதைக்களத்தில் நடித்திருக்கும் படம்தான் ‘விஸ்வநாத் & சன்ஸ்’.

படத்தின் தொடக்கக் காட்சியிலேயே இது வழக்கமான மாஸ் ஹீரோ கதை அல்ல என்பதை மிகத் தெளிவாக உணர்த்திவிடும் இயக்குநர் வெங்கி அட்லுரி, சஞ்சய்யின் ஆளுமையை அவரது செயல்கள் மூலமே அறிமுகப்படுத்துகிறார். ராதிகா - சூர்யா இடையிலான பிணைப்பு, அதே போல மமிதா - ராதிகா இடையிலான காட்சிகள், சூர்யா - மமிதா இடையிலான உரையாடல்கள் முதல் பாதிக்கு பலமாக அமைந்திருந்தது.

சில திரைக்கதைத் தொய்வுகளும் இரண்டாம் பாதியில் குறைகளும் இருந்தாலும், எந்தவொரு முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளோ, வலிந்து திணிக்கப்பட்ட வன்முறையோ இல்லாமல், குடும்பத்தோடு கண்டு மகிழும் வகையில் ஒரு நெகிழ்வான, முற்போக்கான கதையை கொண்டிருக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ செப்டம்பர் 11-ம் தேதி முதல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் காணக் கிடைக்க இருக்கிறது.

Meet Sanjay Vishwanath - Athlete, billionaire, philanthropist and a loving father 😎 😍 pic.twitter.com/bHAlaMNev0