📅 Monday, 21 September 2026 IST | புரட்டாசி 5, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News September 21, 2026 12:03 PM

சவுதி அரேபியாவில் தாக்குதல் அச்சம்; ஊழியர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

சவுதி அரேபியாவில் தாக்குதல் அச்சம்; ஊழியர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன்: சவுதி அரேபியாவில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தொடர் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் நிலவும் பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, அமெரிக்க அரசு தனது மக்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்க வெளிறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய கிழக்கில் நிலவும் பதட்டங்கள் காரணமாக, பாதுகாப்புச் சூழல் சிக்கலானதாகவே உள்ளதுடன், எதிர்பாராத விதமாக நிலைமை மோசமடைவதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன. தற்போது மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும்.

விமான சேவைகள் ரத்து, வான்வெளி மூடப்படுதல் மற்றும் பயண இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை அறிந்து இருக்க வேண்டும். ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி படையினர், பொதுமக்கள் விமான நிலையங்கள் உட்பட, சவுதி அரேபியாவுக்கு எதிராகப் போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ராணுவ மோதல் மிக வேகமாக மோசமடைவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது. மத்திய கிழக்குக்கு வெளியே உள்ள அமெரிக்கர்கள், அப்பகுதிக்குச் செல்வது மற்றும் அப்பகுதி வழியாகப் பயணம் செய்வது குறித்துத் தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

அப்பகுதிக்குச் செல்பவர்கள் அல்லது அங்கிருந்து வருபவர்கள், விமான நிலையம் மற்றும் விமான நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களைக் கண்காணிக்க வேண்டும். மத்திய கிழக்குக்கு வெளியே அமெரிக்கத் தூதரகங்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

ஈரான் மற்றும் ஈரானை ஆதரிக்கும் குழுக்கள், வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க வணிகங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் உட்பட, உலகம் முழுவதும் உள்ள அமெரிக்கர்களுடன் தொடர்புடைய இடங்களையோ குறிவைக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.