📅 Friday, 16 October 2026 IST | புரட்டாசி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 15, 2026 08:03 PM

CJP போராட்டத்தில் பங்கேற்ற நடிகர் இம்ரான்கானுக்கு சிக்கல்.. இந்தியாவை விட்டு

CJP போராட்டத்தில் பங்கேற்ற நடிகர் இம்ரான்கானுக்கு சிக்கல்.. இந்தியாவை விட்டு

CJP போராட்டத்தில் பங்கேற்ற நடிகர் இம்ரான்கானுக்கு சிக்கல்.. இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு!

அக்டோபர் 10ம் தேதி நடைபெற்ற இந்த போராட்டத்தில் , இம்ரான் கான் அவரது மனைவியும் நடிகையுமான லேகா வாஷிங்டன் மற்றும் உறவினர் சாய்ன் மேரி ஆகியோருடன் கலந்துக் கொண்டார். கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் அவர் பங்கேற்றார்.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் நடிகர் இம்ரான் கான் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மும்பை காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ஆணையருக்கு எதிராக போராட்டம்

மும்பை ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. அக்டோபர் 10ம் தேதி நடைபெற்ற இந்த போராட்டத்தில் , இம்ரான் கான் அவரது மனைவியும் நடிகையுமான லேகா வாஷிங்டன் மற்றும் உறவினர் சாய்ன் மேரி ஆகியோருடன் கலந்துக் கொண்டார்.

அப்போது இம்ரான்கான் காவல்துறையினரால் போராட்டத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. ஆனால் போராட்டத்தில் கலந்துகொண்ட பின் ஊடகங்களிடம் இம்ரான் கான் பேசினார். அப்போது தான் எந்தவொரு குறிப்பிட்ட கோரிக்கையுடனும் வரவில்லை என தெரிவித்தார். மேலும் இந்தியாவில் வாழும் ஒரு குடிமகனாக மக்களின் சுதந்திரம் ஏன் கட்டுப்படுத்தப்படுகிறது மற்றும் மக்களின் குரல் ஏன் ஒடுக்கப்படுகிறது என்பதை நேரடியாக வந்து பார்க்கவே போராட்டத்திற்கு வந்ததாக தெரிவித்தார். எனினும் இம்ரான் கான் போராட்டத்தில் கலந்து கொண்டது பெரும் சர்ச்சைகளை கிளப்பியது.

நாட்டை விட்டு வெளியேற உத்தரவு

இந்நிலையில் நடிகர் இம்ரான் கான் இந்தியாவை விட்டு அக்டோபர் 28ம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என மும்பை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக சட்டவிரோத அரசியல் போராட்டத்தில் பங்கேற்றதற்காகவும், OCI விதிகள் மற்றும் விசா நிபந்தனைகளை மீறியதற்காகவும் இம்ரான் கான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக தலைவர் கிரீட் சோமையா மும்பை காவல்துறையில் புகார் அளித்திருந்தன் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டம் 2025இன் விதிகளின் கீழ் இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம்ரான் கான் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள நிலையில் கடந்த 2005ம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட OCI அட்டை பெற்றவராக உள்ளார். OCI அட்டை இந்தியாவிற்கு வாழ்நாள் முழுவதும் பலமுறை நுழையக்கூடிய விசா உட்பட சில சலுகைகளை அனுபவிக்கும் வெளிநாட்டினருக்கு வழங்கப்படுவதாகும். அதன்படி அவர்கள் இந்தியாவில் கல்வி, சொத்துகள், தொழில்சார்ந்த நடவடிக்கைகள் தொடர்பான பலன்களைப் பெறுபவர்களாக இருப்பார்கள்.

இம்ரான் கான், லேகா வாஷிங்டன் உள்ளிட்டோர் காவல்துறை வாகனத்தில் ஏற்றப்பட்ட நிலையில், “நான் வண்டி ஓட்டப் போகிறேன் போலிருக்கிறது” என புகைப்படம் பதிவிட்டிருந்தார். தொடர்ந்து காவல்துறையினரைப் பார்த்து ஜெய்ஹிந்த் எனவும், உண்மையாகச் சொல்வதானால், நான் ஏன் இங்கு கொண்டுவரப்பட்டேன் என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் எங்கள் அனைவரையும் தெருக்களிலிருந்து அழைத்து வந்து வேன்களில் உட்காரச் சொன்னார்கள்” எனவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி