CSK
ஐபிஎல் 2026 சீசன் முடிந்ததுமே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், ஹர்திக் பாண்டியாவை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என முடிவு செய்து, தொடர்ச்சியாக டிரேடிங் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.ஹர்திக் பாண்டியா ஐடியா: மும்பை இந்தியன்ஸில் இருந்து விலகி, கேப்டன் பதவியை கொடுக்கும் அணிக்கு செல்ல முடிவு செய்திருந்த ஹர்திக் பாண்டியா, பிறகு மகேந்திரசிங் தோனியுடன் பேசியப் பிறகு, சிஎஸ்கேவில் ஒரு வீரராக விளையாட சம்மதம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, மும்பை இந்தியன்ஸுடன் சிஎஸ்கே நிர்வாகம் தொடர்ச்சியாக பேச்சு வார்த்தையை நடத்தி வரும் நிலையில், பேச்சு வார்த்தையும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.மேலும், ஹர்திக் பாண்டியாவும், நான் சிஎஸ்கேவுக்கு செல்ல விரும்புகிறேன்த. இதனால், என்னை சிஎஸ்கேவுக்கு டிரேடிங்கில் அனுப்பிவிடுங்கள் எனத் தெரிவித்ததால், மும்பை இந்தியன்ஸும் தொடர்ச்சியாக சிஎஸ்கேவுடன் பேசி வருகிறது.இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகிகளை தொடர்புகொண்ட ஹர்திக் பாண்டியா, கேப்டன் பதவியை கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளாராம். மேலும், அணித் தேர்வு விஷயத்திலும், துணைக் கேப்டன் தேர்வு விஷயத்திலும், நான் சொல்வதைதான் நிர்வாகம் கேட்க வேண்டும். இதற்கு சம்மதம் தெரிவித்தால்தான், சிஎஸ்கேவில் இணைய முடியும் என ஹர்திக் பாண்டியா தெரிவித்துவிட்டாராம்.ஹர்திக் இப்படி அதிரடி கோரிக்கைகளை வைத்தாலும், இவரை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்ற முடிவில் தோனி இருக்கிறாராம். இதனால், ஹர்திக் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரையும் சென்னைக்கு அழைத்து பேச தோனி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, ருதுராஜ் கெய்க்வாட்டிடம் பேசி, ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவியை கொடுக்க தோனி முடிவு செய்துள்ளாராம்.ஒருவேளை, ருதுராஜ் கெய்க்வாட் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால், ருதுராஜை அணியில் இருந்து விடுவிப்பது அல்லது ஹர்திக் பாண்டியாவை வாங்காமல் இருப்பது குறித்து, தோனி இறுதி முடிவை எடுப்பார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.சிஎஸ்கே நிர்வாகிகள் அதிருப்தி: ஹர்திக் பாண்டியா, கேப்டன் பதவியை மட்டும் கேட்காமல், இன்னும் சில கூடுதல் அதிகாரங்களை கேட்கிறார். இத்தனை நாட்கள், கேப்டன் பதவி வேண்டாம் எனக் கூறிவிட்டு, தற்போது கேப்டன் பதவியை கேட்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என சிஎஸ்கே நிர்வாகிகள் அதிருப்தியில் இருக்கிறார்களாம். இருப்பினும், தோனியின் இறுதி முடிவுக்காக காத்திருக்கிறார்கள்.டெல்லி கேபிடல்ஸ் பேச்சு வார்த்தை: இந்நிலையில், மும்பை இந்தியன்ஸுடம், டெல்லி கேபிடல்ஸும் ஹர்திக் பாண்டியாவுக்காக பேச்சு வார்த்தையை துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அக்சர் படேல் மற்றும அசுதோஷ் சர்மாவை விடுவிக்க டெல்லி கேபிடல்ஸ் முன் வந்திருக்கும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் கே.எல்.ராகுல், அசுதோஷ் சர்மா ஆகியோரை கேட்டு நிற்கிறது. இப்படி, முதற்கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்று முடிந்திருப்பதாக கூறப்படுகிறது.டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம், எப்படியாவது ஹர்திக் பாண்டியாவை வாங்கிவிட வேண்டும் என்ற முடிவில் இருப்பதால், கே.எல்.ராகுலையும் கூட விடுவிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. டெல்லி அணிக்கு ஹர்திக் வந்தால், கேப்டன் பதவி மட்டுமல்ல, ஹர்திக் கேட்கும் அனைத்து அதிகாரங்களையும் டெல்லி கேபிடல்ஸ் வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.