📅 Saturday, 15 August 2026 IST | ஆடி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema June 03, 2026 07:01 AM

CTR Nirmal Kumar: நேரம் கேட்ட முதல்வர் விஜய்.. நோ சொன்ன இபிஎஸ்.. போட்டுடைத்த அமைச்சர் நிர்மல்

CTR Nirmal Kumar: நேரம் கேட்ட முதல்வர் விஜய்.. நோ சொன்ன இபிஎஸ்.. போட்டுடைத்த அமைச்சர் நிர்மல்

CTR Nirmal Kumar: நேரம் கேட்ட முதல்வர் விஜய்.. நோ சொன்ன இபிஎஸ்.. போட்டுடைத்த அமைச்சர் நிர்மல் குமார்

எடப்பாடி பழனிசாமியை சந்திக்க அப்போது நேரம் கேட்கப்பட்டது. தனிப்பட்ட காரணங்களுக்காக சந்திக்க வேண்டாம் என ஈபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக நிர்மல் குமார் தெரிவித்தார்.

முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றப்பின் அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி சந்திக்க நேரம் கேட்டும் கொடுக்கவில்லை என்று அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் விளக்கம் அளித்தார்.

தலைவர்களை சந்தித்த விஜய்:

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றப்பின் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களான வைகோ, கி.வீரமணி, முக ஸ்டாலின், அன்புமணி, சீமான் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தார். ஆனால் அதிமுக பொதுச்செயலளாரான எடப்பாடி பழனிச்சாமியையும் மட்டும் சந்திக்காமல் இருந்தார். அப்போது நடந்த அதிமுக உட்கட்சி பூசல் விவகாரம் முதலிய காரணங்கள் கூறப்பட்டாலும் முதல்வர் விஜய் இபிஎஸ்சை சந்திக்காமல் சென்றது தவறு என்று விமர்சனம் எழுந்தது.

போட்டுடைத்த சிடிஆர் நிர்மல்:

இந்த நிலையில் தலைமை செயலகத்தில் அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் சந்தித்தார் அப்போது அவரிடம் அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமியை முதல்வர் ஏன் சந்திக்கவில்லை என்கிற கேள்விக்கு பதிலளித்த அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க முதலமைச்சர் விஜய் தரப்பில் இருந்து நேரம் கேட்கப்பட்டதாகவும், ஆனால் இபிஎஸ் தரப்பில் இருந்து உறுதி அளிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

அதிமுகவை காலி செய்த இபிஎஸ்:

அதிமுக-வை காலி செய்ததே எடப்பாடி பழனிசாமிதான். யாராவது திமுக-வுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்வார்களா? அவர் எப்படி செய்தார் என்றே தெரியவில்லை. திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதற்கு எதிராக அதிமுக-வினர் த.வெ.க.-வில் இணைகிறார்கள். அதிமுக-வை மொத்தமாக முடிச்சு பெட்டியை கட்டி பரணில் வைத்து விடுவார்.

டிடிவி ஒதுங்குவது நல்லது

முதலமைச்சர் மக்களுக்காக மக்களை சந்தித்து பேசியிருக்கிறார். அந்த வகையில்தான் நேற்று திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசினார். அவரது உரை எப்படி இருந்தது என்பது மக்களுக்கு தெரியும். மக்களால் புறக்கணிப்பப்பட்டவர்கள் எதேதோ சொல்லி கொண்டுதான் இருப்பார்கள்.

9 வருடங்களாக டிடிவி தினகரன் என்ன செய்தாரோ? அதை பக்கத்து வீட்டுக்காரர்களை அழைத்து கேட்க சொல்லுங்கள். அவர் அரசியலில் இருந்து ஒதுங்குவது அவருக்கு நல்லது. அவருடன் சுற்றிய 50 ஆயிரம் பேரை நடுத்தெருவில் விட்டுவிட்டு, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைத்துள்ளார்.

பயிர்கடன் தள்ளுப்படி

மேலும் ஆட்சி அமைத்த 2 வாரத்தில் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறைகளிலும் உள்ள பிரச்சினைகளை முதலில் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது என்று பேசியிருந்தார்