📅 Sunday, 18 October 2026 IST | ஐப்பசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 18, 2026 12:01 PM

Deva: சிங்கப்பூர் அதிபரின் இறுதி அஞ்சலியில் ஒலித்த தேவா பாடல்! தமிழனின் பெருமை

Deva: சிங்கப்பூர் அதிபரின் இறுதி அஞ்சலியில் ஒலித்த தேவா பாடல்! தமிழனின் பெருமை

Deva: சிங்கப்பூர் அதிபரின் இறுதி அஞ்சலியில் ஒலித்த தேவா பாடல்! தமிழனின் பெருமை தேனிசைத் தென்றல்!

தமிழ் சினிமாவில் வேறு எந்த இசையமைப்பாளருக்கும் கிடைக்காத அங்கீகாரம் தேவாவிற்கு மட்டுமே உள்ளது.

தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக திகழ்ந்தவர் தேவா. இவரின் இசைக்கு தமிழக மக்கள் அனைவரும் ரசிகர்கள் ஆவார்கள். காதல், சோகம், ஆன்மீகம் என அனைத்து வித சூழலுக்கும் ஏற்ப இசையமைத்த இவர் நேற்று காலமானார்.

தேவா உடல் இன்று நல்லடக்கம்:

சுமார் 400 படங்கள் வரை இசையமைத்த தேவாவின் மரணம் மொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. இன்று ஆற்காட்டில் உள்ள அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட உள்ளது. முழு அரசு மரியாதையுடன் தேவா உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.

யாருக்கும் இல்லாத பெருமை:

தேவாவின் புகழ் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் அறியப்பட்டது. தமிழ் சினிமாவில் வேறு எந்த இசையமைப்பாளருக்கும் இல்லாத பெருமை ஒன்று தேவாவிற்கு உள்ளது. அதாவது, சிங்கப்பூர் அதிபரின் இறுதி சடங்கில் தேவாவின் பாடல் ஒலிக்கப்பட்டதே அந்த பெருமை.

சிங்கப்பூர் நாட்டின் 6வது அதிபராக பொறுப்பு வகித்தவர் செல்லப்பன் ராமநாதன் எனப்படும் எஸ்ஆர் நாதன். தமிழ்நாட்டைப் பூர்வீகமாக கொண்ட இவர் சிங்கப்பூரை 1999ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை ஆட்சி செய்தவர். சிங்கப்பூருக்கே அதிபராக இருந்தாலும் தமிழ் மீதான அவரது பற்று குறையவே இல்லை.

அதிபர் இறுதி அஞ்சலியில் ஒலித்த பாடல்:

தேவாவின் தஞ்சாவூர் மண்ணெடுத்து பாடல் அவரது மனதை மிகவும் ஆழமாக பதிந்த பாடலாகவே இருந்தது. இதன் காரணமாக, தான் இறந்த பிறகு தன்னுடைய இறுதிச்சடங்கில் தஞ்சாவூர் மண்ணெடுத்து பாடலை ஒலிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

2016ம் ஆண்டு அவர் உயிரிழந்தபோது அவரது இறுதிச்சடங்கில் அவரின் இறுதி ஆசைப்படி தேவாவின் தஞ்சாவூர் மண்ணெடுத்து என்ற பாடல் ஒலிக்கப்பட்டது. அவரது இறுதிச்சடங்கில் உலகத்தலைவர்கள் அனைவரும் பங்கேற்ற நிலையில், தேவாவின் பாடல் ஒலிக்கப்பட்டது தமிழர்களுக்கே கிடைத்த ஒரு அங்கீகாரமாகவே கருதப்படுகிறது.

ரசிகர்கள் மனதில் வாழும் தேவா:

மறைந்த சிங்கப்பூர் அதிபரான ஆர்.எஸ்.நாதன் தேவாவின் அந்த பாடல் மட்டுமின்றி அவரது அனைத்து பாடல்களுக்கும் தீராத ரசிகர் ஆவார். தேவா இந்த மண்ணில் இருந்து மறைந்தாலும் அவரது இசையும், அவரது புகழும் எப்போதும் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டே வரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

இசையமைப்பாளர் தேவாவின் மறைவால் மொத்த தமிழ்நாடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், திரை பிரபலங்கள் பலரும் நேரில் சென்று தங்களது அஞ்சலியை செலுத்தினர்.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி