Dhanush : ‘ஒரு தமிழனா!’ யாரு நீங்க தமிழனா சார்?’ நடிகர் தனுஷை கண்டிக்கும் தமிழர்கள்..!
Dhanush : ‘ஒரு தமிழனா!’ யாரு நீங்க தமிழனா சார்?’ நடிகர் தனுஷை கண்டிக்கும் தமிழர்கள்..!
’தமிழ்நாட்டில் பிறந்ததாலோ, வாழ்வதாலோ, தமிழ் திரையுலகில் முன்னணியில் இருப்பதாலோ தனுஷ் தமிழராக ஆகிவிடமுடியாது. இன அடையாளத்தை மறைத்து தமிழக அரசியலில் குதித்தாலும், தமிழர்கள் தனுஷை நம்பமாட்டார்கள்’
தமிழ்நாட்டில் தமிழர்களை விட பிற மொழி பேசுபவர்கள்தான் அரசியலில், அதிகாரத்தில் ஆளுமை படைத்தவர்களாக இருக்கிறார்கள் என்ற விமர்சனம் பல ஆண்டுகளாக இங்கு நீடித்துக்கொண்டிருக்கிறது. தமிழர் ஆட்சியை, தமிழருக்கான ஆட்சியை உருவுக்குவோம் என்று கட்சித் தொடங்கிய நாள் முதல் களமாடும் சீமானை கூட, இந்த தமிழ்ச் சமூகத்தால் வெற்றி பெற வைக்க முடியாத நிலை இருக்கிறது என தமிழர் அமைப்புகளே வெளிப்படையாக வேதனையை கொட்டித் தீர்த்து வருகின்றனர். இப்படியான நிலையில், வேறு மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் எல்லாம், தமிழ்நாட்டில் வந்து, தமிழர் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு அரசியலில் அடியெடுத்து வைத்து, ஆட்சியை பிடிக்க நினைக்கிறார்கள் என்ற கருத்துக்கு வலுச் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது நடிகர் தனுஷின் ரசிகர் சந்திப்பு கூட்டம் என்கிறார்கள் தமிழ் உணர்வாளர்கள்.
தன்னை தமிழராக காட்டிக்கொள்ள முயற்சிக்கும் தனுஷ்
சமீபத்தில் திருவள்ளூரில் நடைபெற்ற ரசிகர் சந்திப்பு கூட்டத்தில் பேசிய நடிகர் தனுஷ், தன்னுடைய ராயன் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது குறித்து பலரும் விமர்சிப்பதாகவும், ஒரு தமிழனுக்கு கிடைக்கும் தேசிய விருதை, ஒரு தமிழனாக இருந்து தட்டிவிடாதீர்கள் என்று பேசியிருந்தார். இந்த பேச்சும் அவரது ரசிகர் சந்திப்பும், நேற்றைய பிறந்தநாளுக்கான மக்கள் சந்திப்பும் தனுஷின் அரசியல் பிரவேசத்திற்கான அடித்தளமாக பார்க்கப்படும் நிலையில், தனுஷின் இன அடையாளம் தொடர்பான விவாதம் இப்போது எழுந்திருக்கிறது.
தனுஷ் உண்மையிலேயே தமிழரா ?
ஏற்கனவே தமிழ்நாட்டில் வேறு மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் அரசியல் உள்ளிட்ட துறைகளில் அதிகாரம் செய்துகொண்டிருக்கும் நிலையில், தனுஷும் அப்படியான அதிகாரத்திற்கு ஆசைப்படுகிறார் என்பது தமிழ் உணர்வாளர்களின் குற்றச்சாட்டு. தன்னை தமிழராக அடையாளப்படுத்திக்கொள்ளும் தனுஷ், உண்மையிலேயே தமிழர் இல்லையென்றும் அவர் தெலுங்கு இனத்தை சேர்ந்தவர் என்றும் அவரது பூர்விகமும் கூட தமிழ்நாடு இல்லை என்றும் அவர்கள் குற்றச்சாட்டுகளை முன் வைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
ஆதாராமாக முன் வைக்கப்படும் தனுஷ் தந்தை வீடியோ
அதற்கு ஆதாரமாக தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா நேர்காணல் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கும் ம் தமிழ் உணர்வாளர்கள், தனுஷ் தெலுங்கு மொழி பேசும் கவரநாயுடு சமூகத்தை சேர்ந்தவர் என்று வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
உண்மையை மறைப்பது ஏன்?
தமிழ்நாட்டு அரசியலில் அடி எடுத்து வைப்பதற்கு தன்னை தமிழராக, தமிழ் உணர்வாளராக காட்ட வேண்டிய அவசியம் இருப்பதால் தனுஷூம் மற்ற மொழி பேசும் அரசியல் வாதிகள் மாதிரி தன்னை தமிழராகவும், தமிழ்நாட்டின் அடையாளமாகவும் மாற்ற காட்ட முயற்சிப்பதாகவும், அதற்காக தன் தாய் மொழியையும் தன்னுடையை இனத்தையுமே அவர் மறைப்பதாகவும் தமிழ் அமைப்புகள் குற்றஞ்சாட்டத் தொடங்கியிருக்கின்றன.
தமிழ்நாட்டில் பிறந்ததாலோ, தமிழ்நாட்டில் வாழ்வதாலோ, தமிழ் திரையுலகில் முன்னணி நடசத்திரமாக இருப்பதாலோ மட்டுமே தனுஷ் தமிழராக ஆகிவிடமுடியாது என்றும் இனி தமிழர் அல்லாதவர்களை தமிழர்கள் நம்பத் தயாராக இல்லையென்றும் தெரிவித்திருக்கும் தமிழ் மொழி பற்றாளர்கள், ’எங்கு பிறப்பினும் தமிழன், தமிழனே ; இங்கு பிறப்பினும் அயலான், அயலானே’ என்ற பாரதிதாசன் வரிகளை மேற்கொள்காட்டி, தனுஷின் முகத்திரையை சமூக வலைதளங்களில் கிழிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி