📅 Monday, 19 October 2026 IST | ஐப்பசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 18, 2026 11:03 PM

எல்.கே. அத்வானி விரைவில் நலமுடன் திரும்ப வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

எல்.கே. அத்வானி விரைவில் நலமுடன் திரும்ப வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணைப்பிரதமருமான எல்.கே. அத்வானி (வயது 98) உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் நலமுடன் திரும்ப வேண்டும் என தமிழக மாநிலத்தின் பாஜக கட்சி தலைவரான நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில்,

மாண்புமிகு பாரத ரத்னா எல்.கே. அத்வானி பாரதிய ஜனதா கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவராகவும், பலமுறை தேசியத் தலைவராகவும், நாட்டின் முன்னாள் துணைப் பிரதமராகவும் ஆற்றிய அரும்பணிகள் என்றும் நினைவுகூரத்தக்கவை.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து மிகுந்த கவலை அடைந்தேன். அவர் விரைவில் பூரண நலம் பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் மீண்டு வர இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

தேசத்தின் நலனுக்காகவும், கட்சியின் வளர்ச்சிக்காகவும் நீண்டகாலம் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அவரது உடல்நலம் விரைவில் சீரடைந்து, நலமுடன் திரும்ப வேண்டும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.