📅 Thursday, 27 August 2026 IST | ஆவணி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 27, 2026 06:03 PM

எங்களுக்கு வெற்றி கிடைக்கல.. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் இன்று வென்றது.. இலங்கையை பாராட்டிய சுப்மன் கில்

எங்களுக்கு வெற்றி கிடைக்கல.. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் இன்று வென்றது.. இலங்கையை பாராட்டிய சுப்மன் கில்

எங்களுக்கு வெற்றி கிடைக்கல.. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் இன்று வென்றது.. இலங்கையை பாராட்டிய சுப்மன் கில்

கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஃபாலோ ஆன் வழங்கிய நிலையில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆட்டம் சமனில் முடிவடைந்தது. இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது.

ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் சமனை விட வெற்றி தான் முக்கியம். இதனால் இது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படுத்திருக்கிறது.

போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணி கேப்டன் சுப்மன் கில், "உண்மையை சொல்ல வேண்டுமென்றால் எந்த மாற்றத்தையும் செய்திருந்தால் கூட மூலம் இந்த போட்டியில் நிச்சயம் வென்று இருக்க முடியாது. ஏனென்றால் கடந்த மூன்று நாட்களாக பல ஓவர்களை நாங்கள் வீசி களத்தில் இருந்தோம். எங்களால் செய்ய முடிந்ததை செய்து விட்டோம்."

"இருப்பினும், இலங்கை வீரர்கள் பிரமாதமாக விளையாடினார்கள். அந்த அணியின் பேட்டர்கள் தங்களது திறமையை வெளிக்காட்டினார்கள். கொஞ்சம் அதிர்ஷ்டமும் அவர்களுக்கு உதவியது. இந்தத் தொடர் எங்களுக்கு பல நல்ல விஷயங்களை தந்து இருக்கிறது. நாங்கள் இலங்கை அணியிடம் இருந்தும் சில விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கின்றோம்."

"ஃபாலோ ஆன் பெற்று கடும் நெருக்கடியில் இருந்து, அவர்கள் எப்படி மீண்டு வந்தார்கள் என்பதை பாராட்ட வேண்டும். எங்கள் அணியின் படிக்கல், மானவ் சுதர், ராகுல் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். வேகப்பந்துவீச்சாளர்களும் நன்றாக செயல்பட்டார்கள். உண்மையிலேயே டெஸ்ட் கிரிக்கெட் விளையாட இது சிறந்த காலமாக எங்களுக்கு இருக்கின்றது."

"தொடர்ந்து ஒரே மாதிரி சிறப்பாக விளையாட வேண்டும் பயிற்சியில் செய்ததை களத்தில் செய்ய வேண்டும். மானவ் சுதர் செயல்பட்ட விதம் என்னைக் கவர்ந்தது. அவர் சிறப்பான முறையில் பந்து வீசி வருகிறார். அவர் பந்தை வீசும் விதமும் அதற்கு அவர் கை மற்றும் மணிக்கட்டை எப்படி பயன்படுத்துகிறார் என்பதையும் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது."

"இனி அவர் எங்களின் மிகவும் முக்கிய ஒரு பவுலராக இருக்கப் போகிறார். அடுத்ததாக நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட நியூசிலாந்து செல்ல இருக்கின்றோம். அது எங்களுக்கு ஒரு நல்ல தொடராக இருக்கும் என்று நினைக்கின்றோம். அதன் பிறகு சொந்த மண்ணில் நடைபெறும் தொடர் இருக்கின்றது."

"நாங்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்வோம் என்ற நம்பிக்கை இருக்கின்றது நான் முன்பே சொன்னது போல் விளங்குகிறது. சிறப்பாக செயல்பட்டார்கள் பாலோ ஆன் வழங்கியபோது அதுதான் சிறந்த முடிவாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் இலங்கை வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். வெற்றி தோல்வி எங்களுக்கு இல்லை என்றாலும் டெஸ்ட் கிரிக்கெட் வெற்றியை பெற்று இருக்கிறது" என்று கூறினார்.