📅 Tuesday, 11 August 2026 IST | ஆடி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 10, 2026 03:03 PM

எனக்கா இடமில்லை? பழிவாங்கும் முகமது ஷமி.. உலகக்கோப்பையில் இந்தியா தோற்றால் அஜித் அகர்கர் காலி

எனக்கா இடமில்லை? பழிவாங்கும் முகமது ஷமி.. உலகக்கோப்பையில் இந்தியா தோற்றால் அஜித் அகர்கர் காலி

எனக்கா இடமில்லை? பழிவாங்கும் முகமது ஷமி.. உலகக்கோப்பையில் இந்தியா தோற்றால் அஜித் அகர்கர் காலி

மும்பை: இந்திய அணியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தனக்கு இடம் அளிக்கப்படவில்லை என்றாலும் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். இது தான் பிசிசிஐ தேர்வுக் குழுவுக்கு பெரிய தலைவலியாக மாறி உள்ளது. ஒரு வகையில் தனக்கு இடம் மறுத்த தேர்வுக் குழுவை பழி வாங்கும் முயற்சியாகவே முகமது ஷமியின் உள்ளூர் ஆட்டம் மாறி வருகிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஷமி இந்திய டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல கடந்த 2025 முதல் பாதியில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடி இருந்தார். அதன்பின் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.

அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழு, இந்திய அணியில் பல வீரர்களுக்கு காயம் ஏற்பட்ட போதும் முகமது ஷமியை மீண்டும் அணிக்குள் கொண்டு வர ஆர்வம் காட்டவில்லை. 2027 ஒருநாள் உலகக்கோப்பைக்கான அணியை கட்டமைக்கும் பணிகளை இந்திய அணி ஏற்கனவே தொடங்கியுள்ளது. மேலும், காயம் காரணமாக விலகிய ஜஸ்பிரித் பும்ராவிற்கு மாற்று வீரரைத் தேடி வருகிறது. இந்த இக்கட்டான நிலையிலும் முகமது ஷமியின் பெயர் தேர்வுக்குழு கூட்டத்தில் பரிசீலிக்கப்படவில்லை.

அஜித் அகர்கர் ஷமியின் வாய்ப்பு பற்றி பேசுகையில் அவர் உடற்தகுதியுடன் இல்லை என்றார். ஆனால், முகமது ஷமி கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய அளவில் நடைபெற்ற அனைத்து உள்நாட்டு டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதிலும் அவருக்கு பெரிய அளவில் காயம் எதுவும் ஏற்படவில்லை. மேலும், அவர் தொடர்ந்து விக்கெட்களையும் வீழ்த்தி வருகிறார்.

முகமது ஷமிக்கு காயம் ஏற்பட்டு இருக்கிறது என்றால் எப்படி அவர் இடைவிடாமல் உள்ளூர் போட்டிகளில் ஆட முடியும் என்ற கேள்வி உள்ளது. இது தேர்வுக் குழுவுக்கு முதல் சிக்கலாக உள்ளது. அடுத்து இந்திய அணியில் தற்போது சரியான வேகப் பந்துவீச்சாளர்களே இல்லாத நிலை உள்ளது. இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியில் இருக்கும் ஒரே அனுபவ வேகப் பந்துவீச்சாளர் பும்ரா மட்டுமே. அவருக்கும் அடிக்கடி காயம் ஏற்பட்டு பல தொடர்களில் ஆட முடியாத நிலை உள்ளது.

அவருக்கு அடுத்து சிராஜ் மட்டுமே இந்திய அணியின் ஒரே நம்பிக்கையாக இருக்கிறார். ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப் என சில வேகப் பந்துவீச்சாளர்கள் வந்தாலும் அவர்களின் அனுபவம், ஃபார்ம் ஆகியவை பின்னடைவை ஏற்படுத்துகின்றன.

இந்த நிலையில், 2027 ஒருநாள் போட்டி உலகக்கோப்பையில் ஷமியை தேர்வு செய்யாமல் இந்திய அணி விளையாடி, அதில் சொதப்பினால் நிச்சயம் ரசிகர்கள் கடும் விமர்சனத்தை முன் வைப்பார்கள். ஷமி தொடர்ந்து 2 - 3 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடி வருவதை சுட்டிக் காட்டி தேர்வுக் குழுவை கேள்வி கேட்பார்கள். அந்த வகையில் ஷமி தேர்வுக் குழுவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறார்.