📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema May 27, 2026 07:32 PM

எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் கணவன்

எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் கணவன்

எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் கணவன் - மனைவி இடையே மாறாத ரொமான்ஸ் ரகசியம் இது!

கலவி மொழி கற்போம் - 39

எழுத்தாளர் எஸ்.ரா தனது சிறுகதை ஒன்றில் மனைவியின் அழகை, கணவன் ஆராதிக்க வேண்டிய அவசியத்தைக் கதைப் போக்கில் நுணுக்கமாகக் குறிப்பிடுகிறார். சிறுகதையில் வரும் மனைவி கதாபாத்திரம், ‘நான் அழகாக இருக்கிறேனா… அந்த நடிகையைப் போல இருக்கிறேனா…’ எனக் கணவனிடம் ஆசையாகக் கேட்க, ‘அதெல் லாம் ஒண்ணுமில்ல, உனக்கு எதுக்குடி இந்தப் பேராசை’ என்று கணவன் பதில் அளிப்பதைப் போல ஒரு பகுதி வரும். இதைக் கேட்ட அந்த மனைவி கதா பாத்திரத்துக்கு ஏற்பட்ட வலியை வாசகர் களால் நன்கு உணர முடியும். இது கற்பனை கதை என்றாலும், உண்மையில் பல குடும்பங் களில் இப்போதும் தொடர்ந்துகொண்டிருக் கும் சர்வ சாதாரண உரையாடல்.

திருமணத்துக்குப் பிறகு பல மாதங்களை, வருடங்களைக் கடந்தாலும், மனைவியின் அழகை அங்கீகரிப்பது அவசியம். காதலிக்கும்போதும், திருமணமான புதிதிலும், ‘கண்ணே, அமுதே, மணியே, அழகே, சுடரொளியே’ எனக் கவிதை பாடியவர்கள், பிறகு காணாமல் போய் விடுவதுதான் இங்கு பிரச்னையே! உண்மையில், காதலிக்கும்போது உங்கள் இணையரின் அழகை வர்ணிப்பதற்காகக் கிடைக்கும் வாய்ப்புகளைவிட, திருமணத் துக்குப் பிறகு கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம்.

கூடல் ரகசியம்!

இருவருக்கும் மட்டுமேயான கூடல் பொழுதில் மனைவியின் அழகை வெகு அருகில் இருந்து ரசித்த கணவருக்கு வார்த்தைகளுக்கா பஞ்சம்? கூடும்பொழுதில் அழகைப் பற்றி பேசுவது எவ்வளவு கவித்துவமான செயல்பாடு தெரியுமா? உணர்வற்ற கூடல் நிகழ்வுகளைக்கூட சட்டென உணர்வுபூர்வமாக மாற்றக்கூடிய சக்தி, மனைவியை கணவர்கள் வர்ணிப்பதில் ஒளிந்து கிடக்கிறது. கூடும்பொழுதில் மனைவியின் அழகையும் அசைவையும் ரகசியமாக மெல்லிய குரலில் உச்சரித்துப் பாருங்கள், தாம்பத்ய உறவின் இன்சுவையை முழுமையாகப் புரிந்துகொள்வீர்கள்.

சில நேரங்களில் க்ரிஞ்சும் தேவைதான்!

‘இந்தப் புடவை எப்படி இருக்குங்க?’ என மனைவி ஆசையாகக் கேட்கும்போது, ‘புடவை நல்லா இருக்கு’ என்று வெறுமனே சொல்வதற்குப் பதிலாக, ‘நீ கட்டினதால புடவையே சூப்பரா மாறிடுச்சு’ எனக் கொஞ்சம் கூடுதல் கற்பனையையும் சேர்த்துச் சொல்வது அக்காலம் தொட்டு இக்காலம் வரை மனைவியைக் கவர்வதற்கான டெக்னிக். கொஞ்சம் க்ரிஞ்சாக இருந்தாலும், மனைவிக்குள் ஆயிரம் என்ன... லட்சம் வண்ணத்துப்பூச்சிகளைப் பறக்கச் செய்யும் சக்தி இந்தப் புகழ்ச்சிக்கு உண்டு.

உண்மையில் மனைவியை ஆசையாகக் கொஞ்சுவது, அவரது அழகைப் புகழ் பாடுவது எல்லாம் ‘அவுட்டேட்டட்’ என்று நினைத்துக்கொண்டிருக்கிறது இப்போதைய தலைமுறை. எவ்வளவு ஆயிரம் வருடங் களைக் கடந்தாலும், யுகங்கள் மாறினாலும் மனைவி மீது கணவர் செலுத்தும் அன்புக்கும் அழகு ஆராதனைக்கும் ஈடு இணையே இல்லை. எப்போதுமே அது கொடுக்கும் காதல் உணர்வு இனிமை யான இல்லறத்துக்கான ஊட்டம்தான். தனது அழகு ஆராதிக்கப்பட வேண்டும் என்று விரும்பாத மனைவி யாராவது இருப்பாரா என்ன?!

திருமணமான தொடக்கத்தில், ‘நான் எப்படி இருக்கேன், இந்த டிரஸ்ல நான் அழகா இருக்கேனா?’ எனக் கேட்கும் மனைவிகள், குடும்பச் சூழல் காரணமாக அதைக் கேட்பதையே சில வருடங்களில் மறந்துவிடுவார்கள். அதுவும் குழந்தைகள், குடும்பப் பொறுப்பு என்று வந்த பிறகு, அழகு பற்றியெல்லாம் அவ்வளவாக கவலைகொள்ள மாட்டார்கள்.

ஆனால், மனைவி கேட்காமலே, மனைவி யின் இந்தந்தச் செயல்பாடுகள் கவித்துவமாக, அழகாக இருக்கின்றன என்று அடிக்கடி அவருக்கு எடுத்துரைத்துக்கொண்டே இருந்தால், அளவில்லா குதூகலம் கரைபுரண்டு ஓடுவதைப் பார்க்க முடியும். இல்லற வாழ்க்கையில் கணவர்கள் கொடுக்க வேண்டிய சின்னச் சின்ன சர்ப்ரைஸ்களில் அவர்களை வர்ணிப்பதும் முக்கியமானது.

தலைக்குக் குளித்து வரும்போது, கண்ணுக்கு மை வைக்கும்போது, ஹேர்ஸ்டைலைப் பொறுத்து, ஆடைகள் சார்ந்து, அன்பை வெளிப்படுத்தும் பாங்கைப் பொறுத்து என, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மனைவியின் செயல் பாடுகளுக்கு அழகூட்டம் கொடுத்துக் கொண்டே இருங்கள்.

‘வெட்டிங் டே அன்னக்கி’, `அந்தக் கல்யாணத்துல’, `அந்தப் பயணத்துல’ எனச் சிறப்பு நாள்களையும், நிகழ்வுகளையும் நினைவில் வைத்துச் சுட்டிக்காட்டி அன்று உங்கள் மனைவி எப்படி இருந்தார் என்று கூறி அவரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துங்கள்.

கவி பாடுங்கள், கவிதை படியுங்கள்!

உங்கள் மனைவிக்காகக் கவிதைப் புத்தகங்களை வாசிக்கத் தொடங்குங்கள். அவற்றில் இடம்பெறும் சில கவிதைகளை உங்கள் மனைவியின் அழகோடு பொருத்தி கவி பாடுங்கள். உங்களுக்குக் கவிபாடும் திறமை இருந்தால் நீங்களே கவிதை வடிக்க முயற்சி செய்யுங்கள். மனைவிக்குப் பிடித்த திரைப்பட பாடல்களின் வரிகளை எடுத்துக் கொண்டு, அவரது அழகோடு பொருத்தி மகிழ்ச்சிப்படுத்துங்கள்.

இயற்கை சூழலில் பேசுங்கள்!

கடற்கரைக்கோ அல்லது மலைப் பிரதேசங்களுக்கோ பயணம் மேற் கொள்ளும்போது, அங்கிருக்கும் இயற்கைச் சூழலை உவமைப்படுத்தி, மனைவியின் அழகைப் பேசுங்கள். இயற்கையான சூழலில் உதிர்க்கும் வார்த்தைகளுக்குக் கூடுதல் ரொமான்டிக் உணர்வு இருப்பது குறிப்பிடத்தக்கது. அத்தருணத்தில் கிடைத்த வார்த்தைகளை இறுதி வரை மனதுக்குள் பத்திரப்படுத்தி வைத்திருப்பார் உங்கள் மனைவி.

ஆழ்மனதிலிருந்து கவிதை வடிக்க உங்கள் அருகிலே இருக்கிறார் மனைவி. இதற்கு மேலும் என்ன யோசனை, தயக்கமின்றி கவிபாடுங்கள் உங்கள் மனைவியைப் பற்றி இப்போதே.

மனைவிகளே… உங்கள் கணவரின் அழகியலைப் பேசுவது எப்படி?

- அடுத்தடுத்த அத்தியாயங்களில் தெரிந்துகொள்வோம்...